பக்கம்:தயா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை எழுத்துலகில் லா. ச. ரா' என்ற மூன்று எழுத்துக் களுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு. உலகில் பிரம்மா படைக்கும் பாத்திரங்கள் வெறும் செய்திகளைத்தான் உண்டாக்குகின்றன. இந்த எழுத்துலக பிரம்மாவின் படைப்புக்களோ, அழியாத இலக்கியத்தை வல்லவா தோற்றுவிக்கின்றன. சில பாத்திரங்களின் பேச்சில் இந்த உண்மையைப் பார்க்கலாம், நீ கண்டது கனவில்லை; உன் கற்பனையின் சத்தியம்! 夺 @g இதில் பொன்னைத்தானா உரைக்கரோம்? ஆளையே உரைக்கரோம்! ကိို யுத்தம் தந்த பரிசா ஒரு வெள்ளைத் தோல் என்னைத் கொடுத்துட்டு கப்பலும் ஏறிப் போச்சு. நான் வெங்காயத் தோலோடு பிறந்துட்டேன். 莎 ;{ நாமம் என்ன திவ்ய மானாலும் ருபத்துக்கு இணை யாகுமா? ருபத்தின் நிழல்களைத்தான் நாமம் தரமுடியும். - { భ இப்படி எத்தனையோ முத்துச் சிதறல்கள் இந்தக் கதைத் தொகுப்பில் காணலாம், அமைதியாகப் படிக்க, சுவைக்க, அசைபோட, மகிழ உங்களுக் கொரு நல்ல விருந்து! எழுத்துலக ஜாம்பவான் உயர்திரு லா.ச. ராமமிருதம் அவர்களின் படைப்பிலக்கியங்களை வானதி பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதைப் பெருமையாகக் கரு துகிறேன். -ன் திருகாவுக்கரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/5&oldid=886349" இலிருந்து மீள்விக்கப்பட்டது