பக்கம்:தயா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மார்பே வேடித்து விடும் போல் அவள் அப்படி. விக்கிக் கொண்டிருக்கும் போதே அவன் புறங்கை மேல் அவள் கண்கள் எரி நீர் Sக்கிக்கொண்டிருக்கும்போதே, ஏற்கனவே திடமாகிக் கொண்டிருந்த தீர்மானம் இன்னமும் கல்லாய் இறுகுவதை உணர்ந்தான். இனி அவன் அதைக் கலைக்கவும் முடியாது. எடுக்கவும் முடியாது. உடைக்கவும் முடியாது. அது அவன் சக்தியை மீறியாகிவிட்டது. அவனே அது உருட்டும் பாய்ச்சிகையாயிற்று! இப்படித்தான் ஒவ்வொன்றிற்கும் ஒரு கட்டம் வந்து விடுகிறது. செய்வதற்கு இஷ்டமில்லை. ஆனால் செய்து கொண்டிருக்கிறோம். செய்ய இஷ்டமுண்டு. ஆனால் செய்ய முடியவில்லை. இந்நிலைக்குக் காரணம் தெரிவ தில்லை. அதன் அந்தக் கட்டத்தில் அதற்குக் காரணமு மில்லை. காரணத்தையொட்டிய காரியமுமில்லை, உலகில் நாம் எல்லோருமே, துரக்கத்தில் நடப்பவர்தாமா? விடுதலையென்பதே கிடையாதா? ஒரு கூண்டிலிருந்து இன்னொரு கூண்டுக்கு மாறுவதுதான் உண்டா? 'இல்லேடி சாரு நான் சொன்னதை மறந்துடு” என்று சொல்லத்தான் வாய் திறந்தது; ஆனால் அதனின்று வந்த வார்த்தைகளோ? - 'இல்லை, நான் போகத்தான் போகிறேன். நீ என்னைத் தடுத்துப் பிரயோஜனமில்லை." என்றுதான் கிளம்பின. அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. அவனே அவன் தீர்மானத்தின் பாய்ச்சிகை ஆயாயிற்று. அவள் உடல் ஒரு குலுங்கு குலுங்கிற்று. அலர்ந்த இதழ் போலும் அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து அவள் நழுவினாள், அவள் மார்பில் அவன் வார்த்தைகள் ஈட்டியைச் சொருகி விட்டதை உணர்ந்தான். 'கூகே?' எங்கோ ஒரு பறவை அலறிற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/50&oldid=886350" இலிருந்து மீள்விக்கப்பட்டது