பக்கம்:தயா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருதி 45 'இருட்டில் தன்னந்தனியாய் தன்னுள் பாய்ந்து விட்ட ஈட்டியைத் தானே பிடுங்க முயன்று தவித்துக் கொண்டிருந் தாள். அவனுக்கு அது நன்றாய்த் தெரிந்தது. கூ-கே கே! கூ-கேt'இந்தக் கொலைக்கு நான் சாr கூகே!” அவள் எழ முயன்றாள். அவசர அவசரமாய் எழுந்து விளக்கைப் போட்டான். அவளுக்கு ஏதோ அதனால் ஒத்தாசைமாதிரி. ஆனால் அவள் முகத்தை அவன் பார்க்க அது உதவியாயிருந்தது. அவள் அவளுள் இறந்து விட்டாள். மார்பில் சொற்கள் பாய்ந்த இடத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, கதவையடைவதற்குள் உடல் தள்ளாடிற்று. குழந்தைக்குச் செய்வதுபோல், அவள் மேலாக்கைச்சரிப்படுத்தி விட்டான். உண்மையாகவே ஒரு பெரிய குழந்தைதான். ""நாளைக் காலை. சாரூ, மன்னிச்சுடு, நாள் மறுபடி வரு-சூ!" துள்ளிக் குதித்தான். காலைப் பிராண்டிக் கொண்டு விழுந்தடித்து ஏதோ ஒடிற்று. அவள் அப்புறம் ஒன்றும் கேட்கவில்லை. அவள் வாசலைத் தாண்டியதும் காற்றில் கதவு நகர்ந்து தானே அவள் மேல் மூடியது. § அதற்குப்பின் அவனுக்கு நேர்ந்தது துக்கமா அல்லது மூர்ச்சையா என்று தெரியவில்லை. கட்டிலில் திரும்பத் திரும்பப் புரண்டதுதான் நினைவிருந்தது. "நாளைக் காலைப் போய் விடவேண்டும். போய்விடு வேன். பிய்த்துக்கொண்டு விடவேண்டும். இந்த ரகனை இனி என்றும் உண்டு. போவேன் வருவேன், இல்லை; போயே போகிறேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/51&oldid=886351" இலிருந்து மீள்விக்கப்பட்டது