பக்கம்:தயா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி - ఢీ' சொருகிக் கொண்டிருந்தாள். முகத்தில் பற்றியிருந்த மஞ்சள் பனீரென்றது. சிவப்பு சால்வை போர்த்த பீடத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு சுருதியை மீட்டிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் கூஜாச் சொம்பு. அவன் வந்ததை அவள் அறிந்து கொண்டதால், கூஜாவை அவன் பக்கம் நகர்த்தினாள். இப்பொழுது ஏனோ அவனுக்கு அவள்மேல் தனிப்பரிவு எழுந்தது. ஒரு வேளை தான் விட்டு விட்டுப் போய்விடப் போவதாலோ என்னவோ, சாரு இப்பொழுது அழகாய்த் தானிருந்தாள். அவன் வெறுக்கும் புன்னகை இப்பொழுது அவளுக்கு ரொம்பவும் ஆனால் காப்பி மாத்திரம் கொஞ்சம் ஆறிப்போய் விட்டது. அவனே கொஞ்சம் தெருப்புக்கோழி, ஆனாலும் பரவாயில்லை. இந்தச் சமயத்தில் இதைப் பற்றி என்ன தர்க்கம். கொஞ்சம் சர்க்கரை? மட்டா கசக்கிறதே!' என்று சொல்லிக்கொண்டே காலி டம்ளரைக் கீழே வைத்தான். குரவைத் திடப்படுத்திக் கொண்டான், 'சரி நான் போப் வருகிறேன்!-’ சிவப்புச் சால்வைக்கடியில் பீடத்தின் கீழ் கீச், கீச்" சென்றது. அலள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவள் புன்னனை விரிந்தது. உடைந்த குழாய்ப்போல் திடீரென சுருதி அவள் மேல் பொழிந்தது. அப்பொழுது தான் அவன் அதைக் கண்டான், அவள் பின்னால் ஒரு சின்ன சீசா, மண்டை யோட்டின் பொம்மைச் சீட்டு ஒட்டிய சீசா, அதை உணர்ந்ததும் உணர்விழந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/53&oldid=886353" இலிருந்து மீள்விக்கப்பட்டது