பக்கம்:தயா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தபா 'நீ கீழே வைக்கிறையா! நான் பிடுங்கி எறியட் டுமா? ஒரு தரம் ரெண்டு தரம்.” "இங்கே ஒண்ணும் ஏலம் விட வேண்டாம்.” ப்ரேமை (frame) வீசி எறிந்து விட்டு கடுகடுத்த முகத்துடன் உள்ளே சென்றாள். கோபத்தின் குதிரை நடையில் இடுப்பு மிடுக்காய்த் திருகி ஒடிவதைப் பார்த்துக்கொண்டு நின்றான். கண்ணெதிரில் புருவ மத்தியில் மின்னிட்டது. மூண்டெழுந்த கோபம் கண நேரத்தில் சிரிப்பாய் மாறுவது மாறும்போதே தெரிந் தது. அதன் ரஸ்ாயனம் தான் தெரியவில்லை. சிரிப்பை அடக்கிக் கொண்டான். அவ்விடம் காண்பித்துக் கொள்ள இஷ்டமில்லை: தன்னையே காட்டிக் கொடுத்துக் கொள்வது போல் வெட்கமாயிருந்தது. இருக்கிற சிரிப்பை இல்லாத கோபத்தால் மூடத்தான் தோன் றிற்று. - முதலில் வந்த கோபங்கூட வேஷந்தானோ? சிரிப்பும் வேஷந்தானோ? ஒரு ஒரு வேஷமும் ஒரு ஒரு நிழல். ஒவ் வொரு நிழலும் ஒரு ஒரு வர்ணம். அவை ஆடுவதும் பூசு வதும் வருவதும் மறைவதும் சில சமயங்கள் தெரிவது கூட இல்லை, இன்று அதுமாதிரி தான் ஆகிவிட்டது. டிபன் பையை மேஜைக்கடியில் வைத்து இன்னும் தலை நிமிரக் கூட இல்லை. "ஸார் உங்களை S.E, கூப்டுகிறார்,' எதிரே பாப்பையா பின்னால் கையைக் கட்டிக் கொண்டு நின்றான், உதட்டோரங்களில் சிந்திய ஏள னத்தை மறைக்கக்கூட அவன் முயலவில்லை. இன்று வன்னான் மடியில் இருந்து எடுத்த யூனிபாரத்தில் ரொம்பவும் துடியாயிருந்தான். உலகில் உள்ள துர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/56&oldid=886356" இலிருந்து மீள்விக்கப்பட்டது