பக்கம்:தயா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரங்கள் 5i பழக்கங்கன் அத்தனைக்கும் உறைவிடமாயிருந்தாலும் பாப்பய்யாவுக்கு நல்ல உடல் கட்டு. சிரிக்கையில் பல் வரிசை அணி வகுப்பாய் நின்றன. இப்பொழுது பளார் என்று பலம் கொண்ட மட்டும் வாய் மேலேயே ஒரு அறை அறைந்தால், ரெண்டு. பல் உதிர்ந்தால் எப்படி இருக்கும். 'ஏன் கூப்பிடுகிறார் இதுக்குள்ளேயே?’ ஏதுமே அறியாதவன்போல் உதட்டைப் பிதுக்கிக் கைகளை அகல விரித்தான். : 'எனக்குத் தெரியும்?” 'பின்னே ஏன் கேக்கறிங்க?" "உனக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும்?” "எனக்கென்ன தெரியும்” "ரிஜிஸ்தரை இவ்வளவு அக்குஸ்ாய் உள்ளே கொண்டுபோய் வெச்சது நீதானே?" 'மனியைப் பாருங்க ஸ்ார், பத்துலே முள் ஒடிஞ்சு அஞ்சு நிமிஷமாச்சு!" ‘'நீ ஏன் கொண்டு போய் வைத்தாய் என்றும் எனக்குத் தெரியும்." 'நீங்க சொல்றது எனக்கொண்னும் புரியல்லிங்க' "ஆதனால்தான் புரியும்படி சொல்கிறேன்-' கோபம் தன்னுன் முறுக்கேறுவது தெரிந்தது. நேற்று அஞ்சு ரூபாய் கடன் கேட்டாய்; நான் கொடுக்கவில்லை என்று தானே? நான் பத்து ரூபாய் நோட்டை பர்ஸுள் சொரு குவதைப் பார்த்ததும் உனக்குப் பொறுக்கவில்லை தானே? ஆனால் அது நானே கடன் வாங்கினது என்று உனக்குத் தெரியுமோ? நான் எதற்கு வாங்கினேன் என்று தெரியுமோ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/57&oldid=886357" இலிருந்து மீள்விக்கப்பட்டது