பக்கம்:தயா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - தயா கொண்டு வந்துவிட்டாயா? பறக்கிறது. அதன் ஆவியா? உன் ஆத்திரமா?” உமாவின் முகம் இறுகியது. நான் இப்போ சிரிக்கனுமா?” ஸைகிள் டயரில் காற்றை வாங்கி விட்டாற்போல் எதிர்ப் பேச்சில்லாமல் அடிப்பதில் உமாவை மிஞ்ச முடியாது. எந்தத் தர்க்கத்திலும் கடைசி வார்த்தை அவளுடையதுதான். 'உமா உமா, கெஞ்சிக் கேட்கிறேன். நாலுபேர் வந்திருக் கிறார்கள். இந்த விஷயத்தில் என் வார்த்தையே ஓங்கி இருக்கட்டும், கொஞ்சம் விட்டுக் கொடு'-என்று கேட்டு : கொண்டாலும் "ஹாம் என்று ஒரு உறுமலாவது உறுமி அவனுக்கு வெற்றி யில்லாமல் அடித்து விடுவாள். காப்பியை எடுத்துக் கொண்டு வாசலறைக்குக் சென் றான். அதுவே அவன் கோட்டை, தனிவனை, பட்டறை, தர்பார் அறை எல்லாமே. டம்ளரை வாய்க்கு எடுத்துச் செல்கையில்-இன்னும் தலை நிமிரவில்லை. அறையில் திடீரென புனுகு குபிரிட்டு, வயிறு குமட்டிற்று. - தெரு வழியே ஒரு ஆள் சென்றான். கழுத்தில் மைனர் சங்கிலி, மஞ்சள் பட்டு ஜிப்பா. புரள புரள நூலும் ரேயனும் கலந்த வேஷ்டி, ஏற்பாடாய்க் கலைக்கப்பட்ட முன்மயிர் நெற்றிமேல் திருகு சரங்களாய்த் தொங்கின. ஜன்னலுக் கெதிரில் கொத்துப் புகையிலைச் சாறை உமிழ்ந்து கொண்டே போய்விட்டான். மண்ணில் ரத்தம் போல் ரத்தம் போல்... ரத்தம் கண்கள் திடீரென இருண்டன. கால் கட்டைவிரலி லிருந்து சுர்ர் ரென ஆவியெழுப்பி, போகும் வழி யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/62&oldid=886363" இலிருந்து மீள்விக்கப்பட்டது