பக்கம்:தயா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரங்கள் 57 தீய்த்துக் கொண்டே போய் மண்டையை அடைந்தது, தலையை இரு கைகளிலும் தாங்கிக் கொண்டான். ரத்தக் குழம்பு திளைத்து சிலப்புச் சக்கிரம், இறுக மூடிய கண்களுள் இமைத்திரையை நார் நாராய்க் கிழித்துக் கொண்டு ஆடிற்று. முந்தாநாள் புதன்கிழமை, காலை ஆபிஸுக்குப் போகும் வழியில் கட்டவிழ்ந்த பொட்டலம் போல் கலைந்து கொண் டேயிருக்கும் கூட்டத்தின் நடுவே நின்று கொண்டிருந்தான். பயங்கரத்தில் நிலைகுத்தி விட்ட கண்கள் காலடியில் இன்னும் முற்றிலும் காயாத ஒரு பெரிய சிவப்புத் திட்டின்மேல் வெறித்து விட்டது. செவிகளில் சமுத்திரம் இரைந்தது. ஒன்றும் இரண்டும், நாலும் அஞ்சுமாய் வார்த்தைகள் மீன் குட்டிகள் துள்ளி எழும்பி மேல் மோதி மூழ்கி அலை வேகத்தில் அடித்துக் கொண்டு போயின. - இப்போத் தான ப்யா-ப்ளாட் பாரத்துலே தேமேனு: போய்க்கிட்டேயிருந்தானே திடீர்னு நினைச்சுக்கிட்டு க்ராஸ் பண்ணான்யா' வரவன் புல் ஸ்பீடுலே வரான். ஏன் வரக் கூடாது? இது கிராஸ் பண்ற இடமா ஏனய்யா க்ராஸ் பண்ணனும்? ஆனால் அவனா பண்ணான்? வேளை தான் பின்னாலே தின்னுட்டு புடரியைப் பிடிச்சுத் தள்ளுதே! "ப்ரேக் டேர்ண், எதுக்குமே டைம் இல்லை. நேரே வந்து இந்தா கொடுக்கறேன் வாங்கிக்கின்னு சக்ரத்தடிலே பூட்டான். ஐயோன்னு சத்தங்கூட இல்லே. அதுக்குக்கூட டைம் இல்லேங்கறேன்னா, அந்த வண்டியிலேயே வாரி யெடுத்துட்டு ஆஸ் பத்திரிக்குப் பூட்டானுங்க. ஆனால் அங்கே என்ன இருக்கும்? போன உசிரு வ்லாஸ்ம் விட்டுட்டாப் போவும்? "ஆமாய்யா இன்னிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பறப்போ பூடப்போறான்னு தெரியுமா? என்னமோ நீ சொல்றதைப் ர்த்த , வில ஸ்த்தை எளுதி ஜே பிலே வெச்சுக்க?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/63&oldid=886364" இலிருந்து மீள்விக்கப்பட்டது