பக்கம்:தயா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 s&fr "ஆனால் அது அவஸ்யம்னு நான் சொல்வேன்.” ‘'எது?” - "விலாலம் எப்பவும் ஜேபிலே இருக்கணும். இந்தப் பட்டணத்திலே காலைலே டுட்டி, மேலே போனவன் மாலைலே உருவாத் திரும்பி வரான்னு என்ன நிச்சியம்?" "இன்னிப் பொழுது போச்சா இன்னிக்கு, நாளைப் பொழுது நாளைக்கு” விலாலம் தெரிஞ்சா வீட்டிலாவது கொண்டுபோய் சேர்க்கலாமில்லே -’’ 'இல்லாட்டி மூணு நாள் பொறுத்து போலிஸ் காரன் வந்து கதவைத் தட்டுவான்' 'இந்த ஆட்டுலேதானே-" காதைப் பொத்திக் கொண்டான். நினைத்துப் பார்க்கக் கூடத் தைரியமில்லை. '-காலைலே கன்னத்தைக் கிள்ளிட்டுப் போன அப்பன் பிக்கேட்டு வாங்கி வருவான்னு குளந்தை நடைக்கும் வாசலுக்குமா நடக்கும்.' - வேலைவிட்டதும் கையோடு வாங்கிவரும் கதம் பத்துக்கு ஜடைபோட்டு கட்டினவ ஜன்னலண்டை காத் திட்டு நின்னுருப்பா-டிபனும் காபியும் சூடாறிப்போவு தேன்னு பெத்தவ அடுக்குள்ளே ஏந்தி இறக்கிட்டிருப்பா.” - இது பாத்தியா, போனவன் என்னவோ ஒண்னு தான். ஆனா ஒரே வீட்டிலேயே அதனுக்கு எத்தனை வேசம்? ஒண்ணுக்கு அப்பன், ஒண்னுக்கு புருஷன், ஒண்ணுக்குப் பிள்ளை, ஒண்ணுக்கு உடன்பிறந்தவன். இன்னுங்கூட என்னென்னவோ கட்டலாம்-’ - 'எல்லாம் நொடி நேரத்துவே கலைஞ்சுட்டுதே என்ன அக்ரம்பு!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/64&oldid=886365" இலிருந்து மீள்விக்கப்பட்டது