பக்கம்:தயா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரங்கள் 59 -'ஆனால் இந்த சிந்திய ரத்தத்தையும் அது காரணமா வித விதமாக் கண்ணிரையும் வாங்கிட்டுத் தானே இந்தப் பூமி வளர்ரது அது பாத்தியா?” -"அதுக்கு சுமக்கிற கூலி வேணாமா? உலகத்திலே எதுதான் சும்மா கிடைக்குது? சும்மா நினைச்சுக்கிட்டு வேணு மானா ஏமாறலாம். அத்தோடு சரி' "-இதுமாதிரி இன்னுன்னும் எங்கெங்கே இதைவிட என்னென்ன கொடுமையோ?-’’ - அப்பவே, அங்கேயே சாரங்கனின் நினைப்பு எழுந்தது. குழந்தையைப் பார்க்கவேணும் எனும் தாக்க முடியாத வேட்கை. குழந்தை வாசலில் விளையாடிக் கொண்டிருப் பான், தெருவில் வண்டி, காடி நினைப்பில்லாமலே உமா மூடாந்தகாரமாய் உள்ளே வேலையாயிகுப் பாள். அம்மாவோ இல்லை. விடா இது? கலை நீட்டி மடக்க இடமில்லை, என்னத்தையோ மடக்கி மடக்கிக் கட்டிப்பிட்டு இது வாசல், இது அறை. இது கூடங்கறான். ஐப்பசிமாதம் முடவனுக்கு மோகமுமதுவுமாய் காவேரி ஸ்னானத்தை விட முடியுமா? நான் இருக்கிறது இன்னும் எத்தனை நாளோ?-அம்மா ஊருக்கு மூணு வாரத்துக்கு முன்னாலேயே போயாச்சு, 'அ-பாl-' சிறகுகள் போல கைகளை விரித்தபடி சாரங்கன் சிரித்துக் கொண்டு வந்து தன் அணைப்புள் மோது வான். பயலுக்கு ஏகமாய் மயிர் வளர்ந்து விட்டது. அசல் பொட்டைக் குட்டியாயிருக்கான். போதும் போதாதற்கு அவன் அம்மா நடுவகிடு எடுத்து ரெண்டு பக்கமும் பின்னால் சும்மா சீவி விட்டிருக்கா. கையில் வேல் ஒண்னுதான் பாக்கி, மொட்டையடித்து விபூதியையும் பட்டை பட்டையா இட்டு விட்டால் பழனி ஆண்டவனேதான். வைத்தீஸ்வரன் கோயில் மூடியிருக்கிறது, ஆனால் கையில் அம்பது ரூபாயில்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/65&oldid=886366" இலிருந்து மீள்விக்கப்பட்டது