பக்கம்:தயா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரங்கள் 懿籍 "எல்லாத்தையுமே பூப்பூன்னுட்டா அப்புறம் என்ன தான் இருக்கிறது?’ - "நான் என்னதைச் செய்தாலும் அவள் குழந்தையை அவள் தானே பெறணும்? பார்க்கப் போனால் நானே லக்ஷ்மிக்கு வந்தனம் செலுத்த வேண்டும்.' 44, ?)》 с» з з е. 'நீ காம்பில் கிளம்பின சமயத்தில் பார்த்துக்கொள். நிறை மாதம். உற்ற துணையில்லை. உன் வீட்டிலேயே இருக் கட்டும் என்று என்னிடம் ஒப்படைத்து விட்டுப் போனதற்கு சிக்கல், கோளாறு, விபரீதமில்லாமல், என் மூக்கை யறுக்காமல் சுகப் பிரசவமாச்சே! கலியாணம், நான் ஒன்று சொல்றேன். ஏதாவது ஒண்னுக் கொண்ணு ஆச்சு வெச்சுக்கோ நீ கூட சினேகிதத்தில் சும்மா இருந்து விடுவாய்: பெற்றவர்கள், மற்ற வர்கள் சும்மாயிருக்க மாட்டார்கள், பழி யாரப்பா சுமப்பது? ஒருத்தரைச் சொல்லப் போவானேன்? உமாவே சும்மா இருக்க மாட்டாள். இப்போ என்னவோ என் மனைவியும் உன் மனைவியும் அக்கா தங்கையா ஒழுகினாலும், உங்களை யார் ஏத்துக்கச் சொன்னது?" என்று கேட்டால் எனக்குப் பேச வாய் எங்கே? நான் ஒருத்தரையும் குற்றம் சொல்லவில்லை இது மனித இயல்பு. 'உலக வழக்கு என்னமோ அப்படித்தான்.' 'நாமும் இவ்வுலகத்தைச் சேர்ந்தவர்கள்தான். தெய்வப் பிறவியில்லை. அதனால் எல்லாம் நல்லபடியாக முடிந்ததே என்று நாம் எல்லோரும் சேர்ந்து சந்தோஷப் படுவதைத் தவிர எனக்குத் தனியாக மாலை சூட்டுவதில் அர்த்த மில்லை.” 'இருந்தாலும்-’ 'நாம் அதைப்பற்றி இனி பேச வேண்டாம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/67&oldid=886368" இலிருந்து மீள்விக்கப்பட்டது