பக்கம்:தயா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தய! அத்தனை பேரிலும் அவள்தான் அதி குதுரகலமா பிருந்தாள். வருவோரை வா, போவோரை இரு என்று, கைக்குழந்தைக்காரிகளுக்குப் பசும்பால் தேடிக் கொடுத்து ஜுரக்காரக் குழந்தைகளுக்குச் சமையல்கார மாமாவைத் "தாஜா பண்ணி மிளகு ரஸ்க் பண்ணச் செய்து கொடுத்து, ஊட்டும் குழந்தையைத் தாயின் இடுப்பிலிருந்து பிடுங்கித் தன் இடுப்பில் ஏற்றிக்கொண்டு ஊட்டி, நலங்கு பாடி, ஏசல் பாடி, சிரிப்பும் கேளிக்கையும் சளைத்த இடத்தில் தான் புகுந்து முட்டக்கொடுத்து மறுபடி மூட்டி விட்டு, மோதல்கள் பயமுறுத்திய இடத்தில் குறுக்கே விழுந்து அவைகளின் கதியைச் சிரிப்பாய் மாற்றி, அங்கும் இங்கும் எங்குமெனப் பம்பரமாய், சமயத்தின் உயிராய்... சம்பந்திப் பிராம்மணன், ஸாதாரணமாய் ரொம்பப் பேசாதவர்; அவரே மூக்கின்மேல் சரிந்த கண்ணாடிமேல் எட்டிப் பார்த்துக்கொண்டு, 'யார் அந்தக் குட்டி? குறு குறு சுறுசுறு வென்று சிரித்த முகமாய் சொருக்களாக்குட்டி? என்றார்.

  • யாரைச் சொல்றேன்'

'அதோ நம் பக்கத்தில், சந்தனம் தாம்பூலம் விசாரிக்கிறாளே?” 'எவள்? அந்தக் கத்தரிப்பூக் கலப்ே புடைவையும் கறுத்த அரக்கில் ப்ளஷ் ரவிக்கையுமா? அது தான் தயா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/7&oldid=886371" இலிருந்து மீள்விக்கப்பட்டது