பக்கம்:தயா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ፵፱፻፫ எப்ாரங் g-4తీ கொண்டு. போனபடியே நிம்மதி:ாய்த் துரங்கிக் கொண்டிருந்தான். தோளைக் குலுக்கி உமா காப்பி டம்ளரை வாயண்டை நீட்டியபோதுதான் மூர்ச்சை தெளிந்தது. "பரவாயில்லை; குடிச்சிட்டே பல் தேயுங்கோ." 'மணி என்ன?" 'ஒன்பது.” “My God?–” அன்று மாலை ஆபீஸ் விட்டதும் நேரே ஆஸ்பத்திரிக்குச் சென்றான். தாயின் கால்மாட்டில் கட்டிலோடு மாட்டிய தொட்டிவில் குழந்தை வளர்ந்திருந்தது, ஒரு கையை வாயில் அடைத்துக் கொண்டு, உடம்பையும் இன்னொரு கையையும் அவன் பக்கமாய் முறித்தது. டொமாட்டோ நோஸ்", இது தானா? இவ்வளவு ரகளையும் இதுதானா? தன்னையறியாது மனம் பொங்கிற்று. இதன் ஆக்கலில் இதன் தாய்க்கும் தகப்பனுக்கும் என்ன பங்குண்டோ அது மாதிரி இதன் பிறப்பில் இதன் பிறப்பித்தலில் (வார்த்தைகள் எப்படித் தாமே தம்மிடத்தில் விழுந்து அடுக்கித் தம்மை சரிப்படுத்திக் கொள்கின்றன. எனக்கும் என் பங்கு உண்டல்லவா? . . உயிர் தன் விடுதலைக்குத் தன்னைப் புரிந்துகொள்வதற் காக திரும்பத் திரும்பத் தன்னைப் பிறப்பித்துக் கொண்டு இயங்கி படும் விசுவகர்ப்ப வேதனையில் என் உதவியும் அதற்கு வேண்டியிருக்கிறதல்லவா? என்னைத் தனக்கு சாகழி யாக்கிக் கொண்டிருக்கிறதே அதுவே அதிலேயே அதற்கு நான் உதவிதானே! இப்படித்தானே! எல்லோரும் ஒருத்தரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/72&oldid=886374" இலிருந்து மீள்விக்கப்பட்டது