பக்கம்:தயா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரங்கள் - 67 கொருத்தர் சாr என்னை யறியாமலே இவ்வுலகரங்கில் நடக்கும் எத்தனை நாடகங்களில் நான் பாத்திரமாய் இருக்கி றேன்! நான் அறிந்தவர் அறியாதவர் எல்லோருமே என்னை ஒவ்வொரு வகையில் பாதிக்கின்றனர். நேற்று விபத்தில் இறந்தவனின் ரத்தத்தில் அப்படித் துடித்தேன். இன்று இக் குழந்தையின் பிறப்பில் முக்கிய பாகம் தாங்கியிருக்கிறேன். நேற்று விடுதலையான ஜீவனே இக்குழந்தையின் பிறப்பில் புகுந்து கொண்டில்லை என்று நிச்சயமாய்ச் சொல்ல முடியு மோ? இப்படி ஒன்றுக்கொன்று ஒருவர்க்கொருவர் சாட்சி யான இவ்வுயிர்ப் பிணைப்பில், நான் ஏது தனி இன்று நேற்று நாளை நேரங்கள் ஏது? நேற்று விபத்தில் இறந்தவனும் நானே. நான் இழுத்த வண்டிக்குள் பிறந்து இத்தொட்டிலில் இருப்பதும் நானே. இன்று நேற்று நாளை எனும், நேரங்களி னுாடே ஒடும் இந்த உண்மை எந்த மட்டுக்கு என்னுள் அழுந் திற்றோ அந்த அளவுக்கு நான் வளர்ந்தவன்தானே? தொட்டிலின் மேல் தாழ்ந்த பார்வை உயர்ந்ததும் தாயின் முகத்தைத்தான் சந்தித்தது, லகதிமியின் கண்கள் அவனைச் சிந்தித்துக் கொண்டிருந்தன. திடீரென்று அவன் காலடியில் பூமி விட்டது. அக் கண்களுள் புகுந்து அவை களின் அகண்ட நிர்ச்சலமான ஆழத்திலிருந்து தப்ப முடியா மல் அதில் தான் மூழ்கிவிட்டாற் போலிருந்தது. வார்டில் இருந்து வெளிவந்த பின்னரும் தன்னில் ஒரு பகுதியை அவள் கண்களின் ஆழத்துள் விட்டு வந்தாற்போல் தான் இருந்தது, நான் இங்குமிருக்கிறேன், அங்குமிருக்கிறேன். . இதன் ரஸாயனம் என்ன? அறைக்கு வெளியே ஆளரவம் கேட்டது. உள்ளே வந்து விளக்கைப் போட்டாள், கையில் பையனைப் பிடித்துக் கொண்டிருந்தாள், ஸ்ாரங்கன் திமிர முயன்றான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/73&oldid=886375" இலிருந்து மீள்விக்கப்பட்டது