பக்கம்:தயா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய மான் ፵፫ . காது, மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, ‘ராவுலே வந்து ஆடையும். பார்த்துச் சொல்றேன்' என்பான்.

  • என்ன போவோமா? மடசாமி எடேண்டா பெட்டியை!” - அப்பர் மடசாமி என்றுதான் அழைப்பார். ஆனால்

அப்பா ஒண்டிதான் அப்படி அழைக்க முடியும். இரும்புப் பட்டை போட்ட தொட்டி மாதிரி கட்டை குட்டையும், குத்து மீசையுமாய் அவனைப் பார்க்கவே யாருக் கும் சற்று அச்சம்தான். ஒரு சமயம் அரை சமயம் அப்பா விடம் கூட அவன் சிலும்புகையில், சர்க்கஸ் கூண்டில், சிங்கமும் சாண்டோவும் ஒருவரை யொருவர் முறைப்பது போலிருக்கும். ஒரு சமயம் கோப வெறியில் அவன் யாரையோ கொலை செய்துவிட்டு, அப்பாவின் தலையீட்டால்தான். ஒருவருடக் கடுங்காவலுடன், கயிறுக்குத் தப்பித்ததாகக் கேள்வி. விஷயத் தின் மற்ற விலாசம் எங்களுக்குத் தெரியாது, அதெல்லாம் அந்த நாள். நான் பிறக்கு முன்பே, ஒன்றொன்று அப்படித் தான். ரொம்பவும் உட்புகாமல் இருப்பதனாலேயே நாட் களின் மூட்டத்தில் என்னவோ என்னவோ என்றே, அதில் அடவியின் இன்னிருள் கண்டு, அதன்மேல் ஒரு நளினமான அழகும் படர்ந்து விடுகிறது. "என்னடா நடவேன்! இன்னும் மயங்கி மயங்கி நிற்கிற வழக்கம் போகவில்லையா?” இரண்டு பேரும் என்னை எங்கே அழைத்துச் செல்கிறார் கள்? இந்த ராட்சஸ்க் கார் ஏது? அப்பாவே ஒட்டும் இடத் தில் அமர்கிறாரே! “Come on, come on!" Erst asso e_6 Gst இழுத்துத் தன் பக்கத்தில் இருத்திக்கொண்டு. காரை ஸ்டார்ட் பண்ணு கிறார்: பண்ணிக்கொண்டே, என்னை ஒரக்கண்ணால் பார்க்கிறார். அவர் விழிகள் கூத்தாடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/77&oldid=886379" இலிருந்து மீள்விக்கப்பட்டது