பக்கம்:தயா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - தயா 'ஆ பாலு, உனக்கு நான் ஒன்றிரண்டு விஷயங்கள் எழுத மறந்து போனேன். பாலு இந்த இரண்டு வருஷமாய் நான் பிளிநெஸில் Lucky, கொஞ்சம் .ucky என்றால் என் அமெரிக்கை பாசாங்காகி விடும். ரொம்ப Lucky என்றேனோ எனக்கு மண்டை வீங்கிப் போச்சு என்பார்கள், ஆனால், a-siranud argātas:Garé práv i have been samned łucky!’ தன்னை மீறிய களிப்பில், அப்பா என்னை முதுகில் அறைந்த அறை எனக்குப் பக்'கென மூச்சை அடைத்தது. பின்னாலிருந்து: 'எசமான், எசமான் உங்க சந்தோஷத்திலே சின்ன அப்யா ரத்தம் கக்கிடும்போல் இருக்குதே!’ zoomi முழுவேகத்தில் வெகு சொகுஸ்ஸாய். அப்பா ரோடு விளிம்பில் காரை வளைத்தார். ஒரு சைகிள் ஆசை தப்பித்தது. . "பின்னே என்ன. அம்மாவும் நீயும் சேர்ந்து இதுவரை இவனை நிழல் பயிர் செய்தது போதும், இனி என் பையனை இப்படித்தான் பதனம் பண்ணனும்!” 'இதென்ன மகனா, மாட்டுத் தோலா பதனம் பண்ண? நீங்க பண்ற தோல் வியாபாரம்னு நினைச்சுட்டேங்களா?" "ஆமாம் நான் ஒரு கசாப்புக் கடைக்காரன்!” கசாப்பு கடைக்காரன்! கசாப்பு...ஆ...ஆ..ஆ.கசாப்பு கடைக்காரன்! அப்பா உரக்கப் பாட ஆரம்பித்தார், பாட்டா அது? களி வெறியின் எக்காளம். காரின் உள்ளடைப்பில் 'பூம்' என்று ஜாலர் போல் எதிரொலித்தது. துரத்துக்குத் தூரம் புள்ளி நகர்ந்தாற் போல் ஆள் நட மாட்டம், நாங்கள் போய்க் கொண்டிருந்த பாதையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/78&oldid=886380" இலிருந்து மீள்விக்கப்பட்டது