பக்கம்:தயா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ா தான் வெறிச்சிட்டுவிட்டது. வண்டி பருந்து வட்டத்தில் ஒரே நிதானத்தில் பறந்து கொண்டிருந்தது. தடவிக் கொடுத்த பூனைபோல் எஞ்சினின் சத்தம் மெத்தென செவியில் ஒத்திற்று. கம்பி வேலி தடுத்த ஒரு பெரிய காம்பவுண்டினுள், நான் கண்டு தெளிவதற்குள் கார் புகுந்துவிட்டது, அடர்ந்த புற்றரைகளினிடையே எங்கள் எதிரே சாலை நெளிந்து ஒடிற்று. அரவம் கேட்டு, ஒரு மான் கம்பீரமாய்த் தலை தூக்கி எங்களைப் பார்த்துவிட்டு மறுபடியும் மேய ஆரம்பித் தது. அதன் முகத்தில் அமைதி குலையவில்லை, விழிகளில் மருட்சியில்லை. அதன் கொம்பின் கிளைகளில் சிக்குண்ட என் மனதை விடுவித்துக் கொள்ளும் முன்னரே, முட்ட வருவதுபோல் எங்களை நோக்கி விரைந்து வரும் மரமதிலின் மேல் இலைக்காடுகளின் பின்னணியிலிருந்து மாடி முகடு திடு மென திருப்பத்தில் தெரிந்ததும் எனக்கு உடல் புல்லரித்து விட்டது. 'என்னப்பா அது?” 'ஆ பாலு, உனக்கு நான் ஒன்றிரண்டு விஷயங்கள் எழுத மறந்து போனேன். மலிவா வந்தது வாங்கிப் போட்டேன், come on get down: 965 Lugojš3th 6205 Q&ijujá stro இதன்மேல் பாக்கி கிடையாது, எவனாவது எதையாவது கொண்டாடிண்டு வந்தானோ, முறிச்சுட்டேன் காலை! ஆமாம். துலுக்கன் தர்பார்தான்; முன்னாலே தண்டனை, பின்னால் விசாரணை - . அப்பாவின் கண்களில் திடீரென சிவப்பேறிவிட்டது. காளைக்குத் திமில் சிலிர்ப்பது அவர் தோள்கள் குலுங்கு கையில் நிஜமாவே பயமாயிருக்கும். அப்பா சொன்னபடி செய்யமாட்டார் என்று சொல்ல முடியாது. ஒரு தடவை வென்னீருள் பாயிலரை நிறைஜலத்துடன் அப்பா அலக்காகத் தூக்கிப் பார்த்திருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/79&oldid=886381" இலிருந்து மீள்விக்கப்பட்டது