பக்கம்:தயா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ž $tarr "தயா தயா! பேர் கொஞ்சம் புது தினுசாயில்லை?" 'தயான்னுதான் யாரும் அழைக்கிறா; அதுக்குத் தான் அவளும் ஏன் என்கிறாள்.' 'தயா! தயா! பேர் மாதிரிதான் இருக்கிறாள் குளு குளுன்னு! நாம் செய்ய வேண்டிய உபசாரங்கள் எல்லாம் அவள் செய்கிறாப் போல் இருக்கிறதே! நம் மாத்துப் பெண்கள் எல்லாம் எங்கே?' - நம் பெண்களா? எல்லாம் ஆபீஸர் ஆம்படையாள் கன்னா! நீங்களும் என்னவோ இன்னிக்குத்தான் புதிசாக் கண்டமாதிரி கேக்கறேளே நம்மாத்துக் கலியாணத்துக்கு நாமேன்னா அவாளைப் பத்திரிக்கையும் பழமும் வெச்சு அழைக்கணும் பாருங்கள், நீங்களே பாருங்கள்; அது அதுகள் மூலைக்கு மூலை நின்னுண்டு தாக்கல் மோக்கல் இல்லாமே பேசிண்டு நிக்கிற அக்கிரமத்தை காமாr ஏ விசாலம்!! ஏ புவனம்!!!-” ஆத்திரத்தோடு அழைப்பிலே உயர்ந்த குரல் கேட்டு அவள் சப்தத்தின் திக்கில் முகம் திருப்பினாள், நடு வகிடின் இரு மருங்கிலும் வங்கி வங்கியாய்ப் படிந்த கூந்தலிலிருந்து இரு சுருள்கள் பிரிந்து மின்சார விசிறியின் விசைக் காற்றில் நெற்றி மேட்டில் விளையாடின. மைக் கோடுகளென ஒழுங்கான l-lു് ബ് வளைவுகளின் எழுச்சியின் துேல் மிதந்து பொட்டு வேர்வையில் கரைந்த குங்குமம் வழிந்து முகத்தில் ஒரு பிரஸ்ன்னம் வீசிற்று. "என்ன மாமி வேணும்?" "எங்காத்து நாட்டுப் பெண்கள் எல்லாம் எங்கே கூப் பிட்ட குரலுக்கு ஏன் என்காகே' 'கல்யாணமோ கார்த்திகையோன் னு அப்படித் தான் இருக்கும். நான் இருக்கேனே உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்கோ.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/8&oldid=886382" இலிருந்து மீள்விக்கப்பட்டது