பக்கம்:தயா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய மான் 75 விடுபட்டு, எனக்குப் புத்துயிர் ஊட்டினாற்போல், உடல் பூரா ஒரு விறுவிறுப்பு பாய்ந்தது. என் பெயருக்கு முழுமை தந்து அழைப்பது அம்மா ஒண்டிதான். 6 & இம்மா! * * "ஊஹாம். நமஸ்காரம். பண்ணாதே. படுத்துண் டிருக்கிறேன்-என்னடா ஒரேயடியாய் இளைச்சுப் போயிருக்கையே!” "விஜயா. இதுவரையில் எந்த அம்மாவுக்கு அவள் பிள்ளை பயில்வானாய்ப் பட்டிருக்கிறான்? உன் பிள்ளை பயில்வானாய் இல்லை. ஆனால் மோசமாயில்லை. கொஞ்சம் உயர்ந்திருக்கிறான்.' "ஏது உங்கள் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே!” "அதுவும் சரிதான். என்ன இருந்தாலும் நான் தகப்பன் தானே! கவலைப்படாதே. மற்றபடி உன் பிள்ளை. மாறி விடவில்லை. நீ அனுப்பிவைத்த மாதிரியே பேசாமடந்தை யாய், ஊமைக் கனா கண்டு கொண்டு...” - பூம் அந்த ஆண்சிசிப்பு அறையின் மூட்டத்தைக் கலைத்து திருகொளி காட்டுகின்றது. அம்மாவால் இதற்குமேல் வற்ற முடியுமோ? நாங்கள் திகைக்கத் திகைக்க இப்படியே நித்யகாண்டம் பூரணாயுசாய் இழுபட்டுக் கொண்டிருக்கிறாள். நான் பார்த்ததற்கிப்போது இன்னும் சுண்டி, குறுகிப்போய், பெருக்கியெடுத்து முகத்தில் வாரிய குப்பைபோல், எலும்புக் குவியலாய், கட்டிலில் கிடக் கிறாள். என்னைப் பெற்றதிலிருந்தே ஒன்று மாற்றி ஒன்று ஏதோ கோளாறுக்கு வைத்யம் பண்ணி, அதில் வேறு சிக்கல் கண்டு கடைசியில் இரைப்பைக்குத் தீரா பழுது வந்துவிட்டது. இப்பொழுது ஜலம்கூட தங்க மறுக்கின்றது. அவளுக்கு இனி விமோசனமில்லை என்று அவரவர்க்குத் தெரிந்தும், அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/81&oldid=886384" இலிருந்து மீள்விக்கப்பட்டது