பக்கம்:தயா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - ¿u.itr மாமி புன்னகை புரிகிறாள். - "பாலு, உங்கப்பாவின் கோபத்தை எப்படி அடையாளம் கண்டுகொள்வதுன்னு எனக்கு இன்னும் தெரிஞ்சபாடில்லை.” ஒருக்களித்த கதவின் பின் கைவளை குலுங்கக் சுேட்டுத் திரும்புகிறேன். கதவை வெடுக்கெனத் திறந்து கொண்டு கையில் கூஜர்ச் செம்புடன் ஒரு பெண் வெளிப்பட்டு, உள் நுழைகிறாள். என்னைப் பார்த்துச் சட்டெனத் திக்பிரமை பிடித்தாற்போல் நிற்கிறாள். - "யாரம்மா இது, நம்ம கொக்கு பாலுவா?” மாமி முகம் சட்டென மாறியது. உஷ் அசடே! இனிமேல் அப்படியெல்லாம் பேசக்கூடாது! பாலு, நீ விட்டுப் போன இடத்திலேயே வருஷங்கள் நின்னு போச்சுன்னு சக்கு நினைச்சுண்டிருக்காள்,' - சகுந்தலாவா இது? பாவாடை சொக்காயிலிருந்து தன் வசமிலாது கையும் காலும் குச்சி குச்சியாய் நீட்டிக் கொண்டிருந்த சுக்கு சக்குவா? இந்த சாரத்தின்மேல் இந்தக் கட்டிடத்தை எழுப்பியிருக்கும் வருடங்களின் வேலைப் பாட்டைக் கண்டு வியப்பதா? சப்பாத்திக் கள்ளி பூச் செண்டாய் மாறிவிட்ட மாயத்தைக் கண்டு பிரமிப்பதா? எனக்கும் சக்குவுக்கும் என்றுமே ஒத்துக்கொள்ளாது, மஹா கோபக்காரி, அடிக்கடி கை மிஞ்சிவிடுவாள். எனக்கு த் திருப்பியடிக்க அதிகாரம் கிடையாது, "பேட்டைக் குழந்தையைத் தொட்டு அடிக்கிறதாவது வெட்கமா யில்லை?. என்று அம்மாவே கண்டிப்பாள். குழந்தையாம்! என்னைவிட ரெண்டு வயதுதானே அவள் சின்னவள்' அப்போ நான்மாத்திரம் பெரியவனோ?” என்று நான் பொறுமுவேன். மாமி தலையிடமாட்டாள். அவள் புன்னகைக்கு ஆவரவர்க்கு இஷ்டமான அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/84&oldid=886387" இலிருந்து மீள்விக்கப்பட்டது