பக்கம்:தயா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாய மான் 79 அம்மாதிரி இப்போது மாமியின் புன்னகைக்கு என்ன அர்த்தம் கொள்வது? கீழிருந்து மாடசாமி குரல் : எசமானுக்கு டெலி போன்!” அப்பா எழுகிறார். "சக்கு, பாலுவுக்கு அவன் அறையைக் காண்பி" அவள் முன்னால் போக நான் பின் தொடருகிறேன். பின்னலா அது? இரைதின்ற பாம்பு, ஒரிருமுறை என்னைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை புரிகிறாள். கன்னம் குழிகின்றது,

  • சரி, நீ மென்னு முழுங்கிண்டுதானிருப்பாய். நானே முந்திக்கறேன். ஏன் பேயறைஞ்ச மாதிரி முழிக்கிறாய்?”

நான் திக்குமுக்காடிப் போனேன், "நாங்களே இப்படித்தான். பருவ வேகம் எங்களுக்கே எங்கள் அடையாளம் மாறிப் போயிடறது. அதிலும் நான் சுபாவத்திலேயே வாளிப்பு. ரொம்பவும் பருத்திருக் கேனா?” - தன் கவலையில் தன்னையே திரும்பிப் பார்த்துக் கொள்கிறாள். "பட்டினியிருந்தால் குறையுமோன்னு பார்த்தால், இப்போதான் ஒருபிடி கூட இழுக்கிறது!" வாய்விட்ட அவள் சிரிப்பின் அவுட்டு நrத்திரங்கள் அவைகளின் பல்வேறு வர்ணங்களுடன் என் நெஞ்சில் பெய்கின்றன. என்னுள் அவை விழுந்த இடங்கள் வர்ணங்கள் மாறுவதை உணர்கிறேன். சட்டென சிரிப்பு ஒடுங்குகிறது, 'அம்மா அப்பப்போ என்னை மட்டந் தட்டிண்டு தானிருக்கா, என்னவோ பழமொழி அடிக்கடி சொல்றா ! பொட்டலம் பிரிச்சா போச்சாம், பொண்ணு சிரிச்சா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/85&oldid=886388" இலிருந்து மீள்விக்கப்பட்டது