பக்கம்:தயா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தயர் ஆரம்பித்து விட்டார். அப்பாவை இப்படி உக்கிரத்தில் பார்க்கப் பார்க்க அப்பா அலுக்காத காட்சி. 'You know, பாலு, நானும் யோசனை செய்துதான் பார்த்தேன். செயலை விட மனிதன் கண்ட காணக்கூடிய விடுதலை எது? விருப்பு வெறுப்பற்று, பலனை எதிர்பாராத செயல் எனும் சிக்கல் எல்லாம் எனக்குத் தெரியாது, நான் கீதை படிக்கவில்லை, உழைத்துவிட்டு, உழைப்பின் பலனை எதிர்பாராவிடில் நான் மனுஷனா? எதிர்பார்த்த பலனை அடையாவிடில் என் பெளருஷம் ஆகும் கதிதான் என்ன? ஆகையால் இந்த வீடு, வாசல், சாமான், தோட்டம், போர்ட்டிகோவில் காத்திருக்கும் கார், மற்ற வசதிகள், சுகங்கள் அத்தனையும் நான். அந்த முறையில் இந்த உலகமே நான். ஏன், பயமாயிருக்கிறதா? என் பேச்சு அகந்தையின் சிகரமாயிருக்கிறதா? இருக்கட்டும். அகந்தை என் சித்தமிசை குடிகொண்டது. கொள்ளட்டும். எனக்கு என் உணர்வு இல்லாவிடில், உயிரே ஏது? இவ்வுணர்வு முற்றின உச்சம்தானே அகந்தை சிந்தனையால்தான் சித்தத்திற்கு அமைதியென்றிருந்தால் இவ்வுலகில் செயலுடன் சிந்தனையும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் mind youl-' தன் வழியில் திடுமென நின்று, நான் குற்றவாளி போல் என்னைச் சுட்டிக்காட்டுகின்றார். அவர் கண்கள் கொதிக்கின்றன. 'என்னிடத்தில் செயலுக்குப் பின்னிடம் தான் சிந்தனை. சிந்தனையென்பது ஒரு போதை, ஹா. ஹா!' அப்பாவின் எக்காளத்தில், அறையில் ஆங்காங்கே அலங்காரமாய், பெரியதும் சிறிதுமாய், உயரமும் குட்டையும் தட்டையுமாய் நிறுவியிருக்கும் வெண்கலக் கிண்ணங்கள் 'கிண்ணென்று அதிர்கின்றன. "நான் படிக்கவில்லை. நான் கடவுளை வழிபடவில்லை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உங்கள் சிந்தனையில் எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/88&oldid=886391" இலிருந்து மீள்விக்கப்பட்டது