பக்கம்:தயா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தயா தாங்கிக் கொள்கிறதே. அதுதான் ஆச்சரியம்! இவ்வுடல் பலம் பெரும்பலம் தம்பி செயலுக்கே. ஆமாம், சிந்தனை யும் உள்பட எச்செயலுக்கும் அடித் தடவாளம் உடலைத்தான் நான் செயலுக்கும் முன் வணங்குகிறேன். எனக்கு சிந்தனை வேண்டாம். பெரும் பெரும் யோசனைகள் செய்திட புத்தி, அறிவு, என ஆயிரம் கூர்மை வேண்டாம். செயல் கொடு, போதும், அது தோலோ, தோலுரியோ. கசாப்போ, அதனினும் ஈனமோ, செயல்கொடு, அச்செயலின். முழுமையுடன் இயங்க உடல்கொடு போதும் வேறெதும், வேண்டிலேன், துயரமோ, வாழ்வோ நான் இயங்கு கிறேன் என்பதே எனக்கு ஒரு பெரிய உண்மை. இந்த உண்மைக்கு இந்த உடல் சாட்சி. ஆகையால் இந்த உடலை முதலில் நான் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன். இந்த உடலை மறுக்க உண்மைக்கே உரிமை ஏது? அதைத் தாங்கு வதே உடல் தானே! ஆகையால் நான் என் உடலை மறுத்தால் உண்மையை மறுத்தவனாவேன். பிறகு நான் வாழவே லாயக்கற்றவன். பிறகு வாழ்வதற்கே எதுவுமில்லை - ஒ, எங்கோ ஆரம்பித்து எங்கெங்கோ போய் வந்துவிட் டோம். நான் வேலையா வெளியே போகிறேன். எப்போ திரும்புவேனோ? எனக்காகக் காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டுவிட்டுத் தூங்கு. உனக்கு ரயில் அலுப்பு இருக்கும்.” அப்பா போய் எந்நேரமோ ஆகிவிட்டது. ஆனால் என்னை ஒரு புயல் ஊடுருவி, தன் வழியில் என்னைச் சக்கையாய்த் துப்பி விட்டுச் சென்றாற்போல் எனக்கிருக் கிறது. அந்த மயக்கத்திலேயே நான் சாய்ந்த இடத்தில் அயர்ந்துவிட்டேனோ என்னை யாரேனும் எழுப்பி சாதம் போட்டார்களா, அல்லது நான் உறங்கும் அசதிகண்டு எழுப்பாமலே இருந்துவிட்டார்களா தெரியாது. நான் துங்கினேனே? அதுவும் அறியேன், நினைவுக்கும் நினைவு தன்னை இழக்கும் எல்லைக் கோட்டிற்கும் இடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/90&oldid=886394" இலிருந்து மீள்விக்கப்பட்டது