பக்கம்:தயா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தயா குடைந்து துருவியெடுத்தது. நான் களைத்துப் போய் தலையணையில் சாய்ந்தேன். 'சக்கு சக்கு சக்கு!!! நெஞ்சு முனகிற்று. பால் விஷமாய்த் திரிந்த பயங்கரத்தைக் காட்டிலும் திரிந்த நஞ்சு மறுபடியும் முன்னைக்காட்டிலும் அதிமதுர மான அமிர்தமாய் மாறும் இன்பத்தில், அவ்வின் பத்தின் வேதனையில், என் காலடியில் பூமியே குலுங்குகிறது. உண்மையில் எங்கள், ஏன் யாருடைய சச்சரவுகளும் அடி, தடிகளுமே மூலபாசத்தின் தோலுரிப்புகள் தாமோ? நானும் யோசித்துப் பார்க்கிறேன். ஹாஸ்டலில் இருக்கையில் எப்போதாயினும் உன்னை நினைத்திருப் பேனோ? அம்மா என்ன பண்ணுகிறாளோ, அம்மாவுக்கு மூச்சு சரியாக ஓடுகிறதோ? என்று ஏமாந்துவிடப் போகி றோமோ என்றெல்லாம் அம்மாவைப் பற்றிக் கவலைப்பட்ட துண்டு. ஒரிரு சமயங்கள் அம்மாவை நினைத்து என்னையறி யாமலே, தூக்கத்தில் கன்னம் நனைந்ததுண்டு சாலா மாமியைப்பற்றிக் கூட நினைக்கப் பிடிக்கும். அம்மாவுக்குப் பக்கபலமாய். தக்க துணையாயிருக்கிறாள் என்று ஆறுதலா யிருக்கும். சக்கு படகாமணி, பத்ரகாளி, சமையல்காரி பெண்ணைப் பற்றிப் பரிவாய் நினைக்க என்ன இருக்கிறது? ஆகையால் இப்போது இதுவே எனக்குப் பிரமிப்பாயிருக்கிறது. இம்மாதிரி காலைவாரி விடும் பரிவு நிலை ஒன்று இருக்கிறதா என்ன? சக்கு, என், என். என் இல்லை, என் தவிப்புக்கு வார்த்தை காணாமல் தவிக்கும் தவிப்பில், சொற்களே பித்தங்களாய் மாறி வயிறு குமட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/94&oldid=886398" இலிருந்து மீள்விக்கப்பட்டது