பக்கம்:தயா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. தியா நெற்றியின் நடுவகிடிலிருந்து கூந்தலின் வங்கிகள் சரிந்தன. புருவத்தில் அகல் வளைவில் கீறிய சாந்தி விருந்து குங்குமம் குபிரெனச் சுடராய் எழுந்தது, விழி யோரங்களில் நீட்டிவிட்ட மை, கத்திப் பிடிபோல் காது வரை ஓடிற்று. மடிப்பினின்று குதித்தெழுந்த கத்தியின் அலகுபோல் விழிகள் எஃகொளி வீசின. என்னைப் பார்த்ததும் சட்டென நின்றான். ஒடியேறி வந்த வேகத்தில் அவள் மார்பு லேசாய் மிதந்தது. அவள் கைகளை எட்டிப் பிடித்தேன். அவள் தன்னை விடுவித்துக் கொள்ள முயலவில்லை, ஆனால் விழிகள் சஞ்சலித்தன. "சக்கு” - மாமியின் குரல் கணிரென ஒலித்தது, அந்தக் கணிரே' துப்பாக்கி ரவை போல் s? ଶଙ୍ଖ மார்பில் பாய்ந்தது, சக்குவை என்னால் பார்க்க சஹிக்கவில்லை. திடீரென அப்படி அலண்டு போனான், கண்கள் வட்டமாய்ச் சுழன் றன. கைகள் கூப்பி விரல்கள் பின்னிக் கொண்டன. திகிலுக்கு ஒரு பெயர் சக்கு. - 'இல்லேம்மா.” 'சக்கு கீழே போ!' . மாமி என்னை நெருங்கினாள். என்னை அடிக்கப் போகி றாளா? இல்லை, மாமி முகத்தில் கோபம் இல்லை. "பாலு சக்கு உன் தங்கை' மாமியின் விழிகள் நிறைந்தன. 'உன் தங்கை, நான் சொல்றது புரியறதாடாத சக்கு உன் தங்கை' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/98&oldid=886402" இலிருந்து மீள்விக்கப்பட்டது