பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14



இருக்குமோ என்பதுதான் எனக்குக் கவலை" என்று நகைத்தான் சுந்தரம்.

"நீதான் சாப்பாட்டு ராமன் ஆயிற்றே. எப்பொழுதும் வயிற்றைப்பற்றிய கவலைதான். அப்பா, எனது கேள்விக்குப்பதில் கிடைக்கவில்லையே!” என்று அப்பாவை நோக்கிக் கேட்டாள் கண்ணகி.

'தரங்கம்பாடியில் நல்ல உணவுக்கு வேண்டிய ஹோட்டல்கள் இல்லை. சுத்தமாகவும் இருக்காது. அதனால்தான் சமையல் கற்றுக்கொண்டால் நல்லது' என்று விளக்கினார் வடிவேலு.

இவற்றையெல்லாம் பொறுமையோடும் மகிழ்ச்சி யோடும் கேட்டுக்கொண்டிருந்தாள் வடிவேலுவின் மனைவி வள்ளிநாயகி. பலநாள் உடல்நலம் இல்லாமை யால் அவள் மிகவும் பலஹீனமாகக் காணப்பட்டாள். உடம்பில் நல்ல ரத்தமில்லாமையால் முகம் வெளுத் திருந்தது. இது ஒருவகை ரத்தச் சோகை என்பார்கள்.

தனக்குப் பிடித்தமான நண்பன் சுந்தரம் வந்து விட்டதை அறிந்து ஒடோடியும் வந்தான் தங்கமணி. சுந்தரத்தின் நகைச்சுவையைக் கேட்டுப் பல மாதங்கள் ஆயிற்று என்பதை உணர்த்த ஜிங்ஜிங்கென்று ஜின்கா குதித்துக்கொண்டே தனது அன்பான வரவேற்பை வெளிப்படுத்தியது அது. ஜின்கா என்பது ஒரு குரங்கின் பெயர். அது ஜிங்ஜிங் என்று