பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15



அடிக்கடி குதிப்பதால் ஜின்கா என்று. பெயர் வைத்தார்கள்.

ஜின்கா என்ற குரங்கை மிகவும் அன்போடு வளர்த்து வந்ததோடு, அதற்குப் பல பயிற்சிகளையும் கற்றுத்தந்திருக்கிறான் தங்கமணி.

'தரங்கம்பாடியில் டச்சுக்காரர் கட்டிய கோட்டை ஒன்று உள்ளது என்று நான் படித்திருக்கிறேன்' என்று ஆரம்பித்தான் தங்கமணி.

'சரி, ஆரம்பித்துவிட்டாயா? உனக்கு அங்கே நிறைய வேலையிருக்கும். நவீன ஷெர்லக் ஹோம்ஸ் ஆயிற்றே" என்று நகைத்தான் சுந்தரம்.

சுந்தரத்தின் பேச்சைக் கவனியாத வடிவேலு, 'தங்கமணி, நீ சொல்வது உண்மைதான். ஆனால் வியாபாரத்தின் பொருட்டாகப் போட்டி போட்டுக் கொண்டு டேனிஷ்காரர்கள் அங்கு கோட்டை ஒன்று கடலோரத்தில் கட்டினார்கள். ஆங்கிலேயரின் சூழ்ச்சி யால் இந்தப் போட்டி வெற்றி பெறவில்லை. தரங்கம் பாடிக் கோட்டையையும் அவர்கள் விட்டுப்போக நேர்ந்தது. டச்சுக்காரர்கள் கொஞ்சம் கை சோர்ந்த போது தரங்கம்பாடிக் கோட்டையை 12 லட்சம் "ரூபாய்க்கு பிரிட்டிஷார் வாங்கிக்கொண்டனர். சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இப்பொழுது அது இ ந்திய அரசங்கத்தாரால் முஸாபரி பங்களாவாக