பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16



உபயோகப்படுத்தப் படுகிறது என்று விளக்கினர். அவர் வரலாற்றுப் பேராசிரியர் அல்லவா?

அடுத்த நாள் தரங்கம்பாடிக்குச் செல்லவேண்டிய முன்னேற்பாடுகள் எல்லாம் "தடபுடலாக’ நடந்தேறின. எல்லாம் ஒரே உற்சாகம். அவசரம் அவசரமாக நடந்தேறின. சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. அப்படி ஒடோடி வேலை செய் தார்கள்.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனக்குப் புதிதாகத் தன் தந்தையார் வடிவேலு அவர்கள் பரிசாக அளித்த உலோகக் கண்டுபிடிப்பான் (Metal Detector) என்ற நூதனமான கருவி சரியாக வேலை செய்கிறதா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான், தங்கமணி. பலவகையான உலோகங்களை ஓரிடத்தில் ஒளித்துவைத்து அவற்றைக் கண்டு பிடிப்பது எப்படி, அந்தக் கருவி சரியாக வேலை செய்கிறதா என்பன போன்ற ஆராய்ச்சியிலே முழுக் கவனம் செலுத்தினான். கடைசியில் அந்தக் கருவி சரி யாகவேவேலை செய்கின்றது என்று கண்டபிறகுதான் பெரிதும் திருப்தியும் பெற்றான். உலோகத்தை எங்கு மறைத்து வைத்தாலும், எத்தனை ஆழத்தில் மறைத்து வைத்தாலும் இந்தக் கருவியைக்கொண்டு கண்டு பிடித்துவிடலாம்.

சுந்தரத்திற்கு பைனுக்குலர் என்ற தொலை நோக்கி ஆடி பரிசாகக் கிடைத்தது. அவனிட