பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
'தரங்கம்பாடிக் கோட்டை '


ரங்கம்பாடிக் கோட்டை கி. பி. 1820இல் கட்டப்பட்டது. காப்டன் ரேலண்ட் கிரேப் என்ற டச்சுக்காரரும் டேனிஷ் கப்பல் படைத்தலைவன் ஒவ் கெட்டியுமாகச் சேர்ந்து ஒரு நிலப்பகுதியை ரூ. 3111 வருட வாடகைக்கு பெற்றுக்கொண்டனர். இருவருமாக இந்த இடத்தை டேனிஷ் குடியேற்ற ஸ்தலமாக்கினர். முதன் முதலாகக் கட்டப்பட்ட உள் கோட்டையான டேன்ஸ்பர்க் கட்டடச் சுவரில் உள்ள வெள்ளைச் சலவைக்கல் சாஸனத்தில் கட்டிய தேதியையும் கட்டியவர் பெயரையும் இன்றும் பார்க்கலாம்.

தங்கமணி தரங்கம்பாடிக் கோட்டையை ஆராய்ச்சி செய்வதற்கு உடனே ஜின்காவுடன் புறப்பட்டுவிட்டான். ஆராய்ச்சியில் அத்தனை ஆர்வம் அவனுக்கு.