பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27



பெயரையும் ஆற்றின் பெயரையும் மனப்பாடம் செய்துவிட்டான் தங்கமணி.

“எப்படியடா. இதற்குள் எல்லாம் ஆராய்ச்சி செய்துவிட்டாய்? எனக்கு ஒன்றும் விளங்கவே யில்லையே!” என்று ஆச்சரியத்தோடு கேட்டான் சுந்தரம். ராஜ வீதி, ராணி வீதி, தளகர்த்தர் வீதி, என்ற பழைய வீதிகளின் பெயரையும் உப்பனாறு என்ற ஆற்றின் பெயரையும் சுந்தரம் இதுவரையில் கேட்டதில்லை.

'இதற்கென்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது. சிலவற்றைப் படித்துத் தெரிந்துகொண்டேன். படித்துத் தெரிந்துகொள்ள முடியாதவற்றை நேரில் பார்த்துத்தான் ஆராயவேண்டும்" என்றான் தங்கமணி.


'நீ முதலில் கடப்பாரையைக் கொண்டு தோண்டுவதற்குத் தயாராக இருக்கவேண்டும்' என்று கூறினான் தங்கமணி. இதற்குள் காலையில் அதிக நேரமாகிவிட்டபடியால் கண்ணகி எதிர் பார்த்துக்கொண்டிருப்பாள் என்ற எண்ணத்துடன் தங்குமிடத்திற்குப் புறப்பட்டான் .த ங் க ம ணி . சுந்தரமும் பின் தொடர்ந்தான்.

வழியிலே ஒரு சுவையான, சுத்தமான தண்ணிர் இருக்கும் ஒர் அதிசயக் கிணற்றைப் பார்த்துக் கொண்டு இருப்பிடத்திற்கு வேகமாக நடந்தார்கள்.