பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
'எதிர்பாரத இடையூறுகள் '



டிவேலுவின் உற்ற ந ண் பரா யி ரு ந் த சப்இன்ஸ்பெக்டர் முத்துசாமி உடனே அவசரமாக 24 மணி நேரத்திற்குள் மாற்றலாகிப் புறப்பட்டு விட்டார். இந்த மாறுதல் எதிர்பார்த்ததுதான். அவருக்குப் பதிலாக வந்தவரும் நல்லவர்தாம். ஆனால், அநாவசியமாக வீண் தொல்லைகளை விலைக்கு வாங்கக்கூடாது என்ற நோக்கம் உடையவர். எனவே, கடப்பரையைக் கொண்டு தோண்டி ஆராய்ச்சி செய்வதை உடனே நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார்.

தங்கமணிக்கு இது ஒரு பேரதிர்ச்சியாக முடிந்தது. தாங்கள் மூவரும் சங்ககிரிக் கோட்டையின் புதையலைக் கண்டுபிடித்த விவரத்தையும், கொல்லி மலைக்குள்ளனுடைய படுமோசமான சிலைக்கடத்தல் களை எவ்வாறு கண்டுபிடித்தோம் என்பதையும் அவற்றில் தாங்கள் எவ்விதப் பயனும் எதிர்பாராமல்