பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41



தனது தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு அடையாள மாகத் தரையில் படுத்துப் படுத்துக் காண்பிக்கும் ஒரு புது விதமான செய்கையையும் அது கற்றுக்கொண் டிருந்தது. தனக்கு இட்ட பணியில் வெற்றி என்றால் ஜின்கா ஜிங்ஜிங்கென்று குதித்துக்கொண்டே வரும். இப்பொழுது ஜின்கா தரையில் படுத்துப் படுத்துத் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதமாக வந்தது.

உடனே தங்கமணி தன் தந்தை பேராசிரியர் வடிவேலுவிடம் விஷயத்தை விளக்கிக் கூறினான். அப்படிக் கூறும் பொழுதே கண்ணிர் பிதுங்குவதை வடிவேலு கவனித்தார்.

'இதற்காக நீ கவலைப்பட வேண்டாம். நாம் விரைவில் கண்ணகியைக் கண்டுபிடித்துவிடுவோம். கவலைப்படாதே. வள்ளிநாயகியிடம் மட்டும் இதைத் தெரிவிக்கவேண்டாம். அநாவசியமாக அவளுக்கு வீண் கவலையை உண்டாக்கக்கூடாது. எப்படியாவது அவளிடம் கண்ணகி ஒன்றிரண்டு நாளைக்கு வரமாட்டாள் என்பதைப் பக்குவமாகச் சொல்லிவிட வேண்டும்' என்றார் பேராசிரியர் வடிவேலு.

"எப்படிச் சொல்லுவது? பொய் சொல்ல நாக்குக் கூசுகின்றதே! அதைப்பற்றித்தான் நான் கவலைப் படுகிறேன்' என்று மறுமொழியாகச் சொன்னான் தங்கமணி.

த-3

த-3