பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43



போயிருக்கவேண்டும். அதுதான் எனக்கு விளங்க வில்லை' என்று மீண்டும் கூறினான் தங்கமணி. அதற்கு விளக்கம் தேவை என்றும் எதிர்பார்த்தான்.

பேராசிரியர் வடிவேலு சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு உடனே 'மாசிலா நாதர் கோயிலைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டார்களா? அது முதலில் தெரியவேண்டும்,' என்றார்,

உடனே சுந்தரத்தை அழைத்து, “நீங்கள் இரு வரும் பேசிக்கொண்டிருந்த பொழுது மாசிலாநாதர் ஆலயத்தைப்பற்றிக் குறிப்பிட்டீர்களா?' என்று கேட்டார் வடிவேலு.

'இல்லவேயில்லை. அது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது” என்று விடை பகர்ந்தான் சுந்தரம். இப்பொழுது அவன் கேலிப் பேச்செல்லாம் எங்கேயோ மறைந்துவிட்டது. தான் தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வினல் அவன் முகம் வாடியிருந்தது.

'மாசிலாநாதர் ஆலயத்தைப்பற்றி எப்படிப் பேசவில்லை என்று அவ்வாறு நிச்சயமாகச் சொல்லுகிறாய்? பேச்சுவாக்கில் மாசிலாநாதர் ஆலயம் என்று உற்சாகத்தில் சொல்லியிருக்க முடியாதா” என்று தங்கமணி கேட்டான். ஆராய்ச்சியிலிருக்கின்ற ஒரு விஷயத்தைப்பற்றி வெளியில் பேசக்கூடாது என்று