பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45



பிடித்துவிடலாம். வள்ளிநாயகிக்கும் வீண்கலக்கம் ஏற்படவேண்டாம். இப்பொழுது உடனே ஒழுகை மங்கலம் மாரியம்மன் திருவிழாவுக்குப் போவதுதான் முக்கியமான வேலை" என்றார் வடிவேலு.

"எதற்கும் இரவிலே மாசிலாநாதர் கோயிலில், நாம் ஆராய்ச்சி செய்யும் இடத்திலே சில போலீஸ் ஜவான்களைக் காவலாக இருக்கச் செய்ய வேண்டும். ஒருவேளை, கண்ணகியிடமிருந்து அவர்கள் உண்மையைத் தெரிந்துகொண்டார்களானல் நாம் ஏமாந்து போய்விடுவோம். ஆகையால், முன் ஜாக்கிரதையாக நாம் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது' என்று தன் தந்தையை நோக்கி யோசனையோடு கூறினான் தங்கமணி.

'உன்னுடைய யோசனையும் சரியாகவே படுகின்றது. நாம் முன்ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது. எதற்கும் முதலில் போலீஸ் நிலையத்திற்குச் செல்லுவோம்' என்றார் வடிவேலு.

இவ்வாறு உரையாடிக்கொண்டே வடிவேலு முதலியோர் வேகமாக நடந்தனர். அதற்குள் போலீஸ் நிலையத்தை அடைந்துவிட்டதால், நடந்த நிகழ்ச்சிகளை போலீஸ் சப்இன்ஸ்பெக்டருக்கு விளக்கிச் சொன்னார் தங்கவேலு. சப்இன்ஸ்பெக்டரும் தங்கமணியின் ஆலோசனையை உடனே ஆமோதித்தார். தங்கமணியின் முன்யோசனையைக் கண்டு