பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
49



காண்கிறோம். இங்கு ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி என்ன வென்றால், பூக்குழியில் பல பக்தர்கள் வேண்டிக் கொண்டபடி தீ மிதித்தலாகும். சுமார் இருபதடி நீளத்திற்கு விறகுக் கட்டைகளைக்கொண்டு எரிய வைத்துவிடுவார்கள். நெருப்பு அனல் வீசிக் கொண்டிருக்கும். ஆனால், பக்தர்கள், வேண்டுதலை யின்மேல் அந்த நெருப்பிலே நடப்பார்களானல் நெருப்பு சுடாதாம்; பூப்போல அவ்வளவு மிருதுவாக இருக்குமாம். அதனால்தான் பூக்குழி என்று அதற்குப் பெயர் வந்ததாம்.

ஒழுகை மங்கலத் திருவிழாவின்போது இந்த அற்புதக் காட்சியைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

மக்கள் கூடின இடத்திலே குடை ராட்டினம், பலகாரக் கடைகள், துணிக்கடைகள், விளையாட்டுச் சாமான்கள், வளையல், ரிப்பன் கடைகள் முதலியவை தாமாகவே தோன்றிவிடும். இவ்வாறு ஒருநாள் முழுவதும் ஒரே கொண்டாட்டமாகக் கழியும்.

போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஜீப் காரிலே செல்லும்போது மேலே கண்ட விவரங்களையெல்லாம் தெரிவித்தார்.

'முதலிலே பூக்குழியைப் பார்க்கவேண்டும். நான் இதுவரையில் பார்த்ததில்லை. நெருப்பு