பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51


ஜின்கா ஒரே தாவில் கண்ணகியை அடைந்தது. அதை எதிர்பார்த்தது போலக் கண்ணகியும் சுருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தாள். அதை உடனே மெதுவாக ஜின்காவிடம் கொடுத்து விட்டாள். அதிலே 'இன்று இரவு மாசிலாநாதர் ஆலயத்திற்கு ஜிப்ஸிகள் வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். அங்கே தயாராக வரவும் என்று எழுதப்பட்டிருந்தது.

பூக்குழியிலே எல்லாருடைய கவனமும் சென் றிருந்ததால் ஜின்கா வந்ததையும், கண்ணகி கடிதம் கொடுத்ததையும் யாருமே கவனிக்கவில்லை. குரங்கு வந்ததுகூடத் தெரியவில்லை. பூக்குழியில் தீ மிதிப் பதைக் காணவேண்டும் என்ற ஆசையே மிகுந் திருந்தது.

'வந்த வேலை முடிந்தது. தீமிதித்தலைக்கூடக் கவனியாமல் உடனே புறப்படவேண்டியதுதான்; தாமதிக்கக்கூடாது' என்று அவசரப்படுத்தினான் தங்கமணி.

'கண்ணகியை விட்டுவிட்டா ?’ என்று கவலையோடு கேட்டான் சுந்தரம்.

'கண்ணகிக்கு யாதொரு தீங்கும் வராது. மாசிலா நாதர் ஆலயத்தில் என்றால் கையும் களவுமாகக் கண்டு பிடித்துவிடலாம். இங்கே வீண் குழப்பம் எதற்கு? என்றான் தங்கமணி,