பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54



மானால் தோண்டிப்பாருங்கள்' என்று மிடுக்கோடு பதிலளித்தாள் கண்ணகி.

உடனே ஜிப்ஸிகள் தோண்டத் தொடங்கினார்கள் கள். கண்ணகி கூறியது போலவே எல்லாம் உண்மையாயின. தங்கமணி யூகித்ததும் சரியாயிற்று. ஜிப்ஸிகள் பழங்காலத்து நாணயங்களையும் நவமணி களையும் பார்த்ததே இல்லை. அதனால் அவர்கள் கையில் அவற்றை எடுத்துக்கொண்டு ஆச்சரியப்படும் போதே, அங்கு தயாராக மறைந்திருந்த போலீஸ் ஜவான்கள், கையும் களவுமாகப் பிடித்து அவர்களைக் கைது செய்தார்கள். போலீஸ் ஜவான்கள் அங்கு எப்படி வந்தார்கள் என்று ஜிப்ஸிகளுக்குப் புரியவே இல்லை.

மறுநாள் பொழுது விடிந்தது. உடனே தொல் பொருள் இலாகா அதிகாரிக்குத் தந்திமூலம் இந்தக் கண்டுபிடிப்பைத் தெரிவித்தார்கள். தொல்பொருள் இலாகா புதிய வரலாற்று உண்மைகளைக் கண்டறிவதை நோக்கமாக உடையது. அதனால் உடனே புறப்பட்டுத் தம்சொந்தக் காரிலேயே தொல்பொருள் இலாகா அதிகாரி திரு. நாகசாமி, வந்து சேர்ந்தார். தங்கமணி, சுந்தரம், கண்ணகி, ஜின்கா ஆகிய நால்வரையும் வாயாரப் புகழ்ந்தார் தொல்பொருள் இலாகா அதிகாரி.

"ஒரு சர்டிபிகேட்கொடுங்கள், ஏனென்றால்...... என்று இழுத்தான் சுந்தரம்.