பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
55


புதிதாக வந்த போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரத்தின் உட்கருத்தை மெச்சித் தட்டிக்கொடுத்தார்.

"எங்கள் இலாகாவே அப்படித்தான். சுலபமாக ஏமாந்து போய்விடக்கூடாது அல்லவா?’ என்று சிரித்துக்கொண்டே சப்இன்ஸ்பெக்டர் மறுமொழி புகன்றார்.

'சப்இன்ஸ்பெக்டர் என்றால் அப்படித்தான் இருக்கவேண்டும். உங்கள்மேல் தவறு இல்லை. உங்கள் கடமையையே செய்தீர்கள். சந்தேகம் தீர்ந்தவுடனே தாங்களும் ஜவான்களும் உற்சாகமாக உதவியதற்கு மிக்க நன்றி' என்றான் தங்கமணி.

ஜின்காவுக்கு அளவு கடந்த சந்தோஷம். அது ஜங்ஜங்கென்று குதித்துக்கொண்டிருந்தது. எல்லாரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.

இதற்குள் கோடை விடுமுறை முடிந்துவிட்டது. அடுத்த நாள் உடனே புறப்பட்டு ஆகவேண்டும். வள்ளிநாயகிக்கும், கடற்காற்று சதா வீசிக்கொண்டு இருக்கும் தரங்கம்பாடிக்கு வந்ததால், உடம்பு நல்ல வலிமை அடைந்துவிட்டது. நல்ல வேளையாகக் கண்ணகியின் கடத்தலைப்பற்றி வள்ளிநாயகி அறிந் திருக்கவே இல்லை. அந்த அதிர்ச்சியான செய்தியி. லிருந்து தங்கமணியின் வேகமான ஆராய்ச்சியினால் தப்பினாள் வள்ளிநாயகி. ஒவ்வொரு கோடை