பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

சுமார் 12 வயது முதற்கொண்டு 16 வயதுவரை யுள்ள இளைஞர்களுக்குத் துணிச்சல் மிகுந்த கதை களில் (Adventure Stories) மிகுந்த ஆர்வம் உண்டு. அவற்றை அவர்கள் ஆர்வமாகப் படிப்பார்க ள். இந்தக் கதைகள் சொல்வதில் இரண்டு வழிகள் உண்டு. குறிப்பிட்ட சில பாத்திரங்களைக் கொண்டு அவற்றின் இயல்புக்கு மாருமல் எழுதுவது ஒருவகை. கொல்லி மலைக்குள்ளன், சங்ககிரிக் கோட்டையின் மர்மம், தரங்கம்பாடித் தங்கப்புதையல் ஆகிய துணிச்சல் மிகுந்த கதைகளில் இதே முறைதான் கையாளப் பட்டுள்ளது. சுமார் 12 வயதுள்ள தங்கமணி என்ற சிறுவன் கூரிய அறிவு உடையவன். பத்து வயதுள்ள சுந்தரமே ஒரு தமாஷ் பேர்வழி. 9 வயதுடைய கண்ணகி பயந்த சுபாவம் உடை யவள். இந்த மூவரையும் வைத்துக் கொண்டுதான் மேலே குறிப்பிட்ட மூன்று நூல்களும் எழுதப் பட்டுள்ளன. ஜின்கா என்ற குரங்கு தங்கமணியினல் நன்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பதால் அது