பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தரங்கம்பாடித் தங்கப் புதையல்


'ஆஹா கண்ணகீ.நீதான் சமையலா? அப்போ...... இன்றைக்கு......அரைப்பட்டினிதான்' என்று இழுத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் சுந்தரம். அவன் கேலிசெய்ய ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது.

"அப்போ என்னவாம்? இந்த ஒரு மாசமா நான் தான் இங்கே சமையல். பீம பாகம், நள பாகம் எல்லாம் தோற்றுப்போகும் என்று அம்மாவே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்' என்று உற்சாக மாகக் கூறினாள் கண்ணகி.

"அப்போ மறுநாளே மதுரைக்கு இங்கிருந்து புறப்பட வேண்டியதுதான். இந்த பீம பாகம் எல்லாம் நமக்குக் கட்டிவராது. பேசாமல் உடனே புறப்பட்டாக வேண்டும். வேறு வழியில்லை

த_1

த_1