பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

அதைக்கட்டிக் காக்கக் கோடிக்கணக்கிலே நம்’ பணத்தையும் செலவிட்டு வருகிருர்கள், ‘நீதி’யை எல்லை கட்டி வகுத்துக்கொண்டவர்கள்!

நீங்கள் பாட்டுக்கு ஹாய்யாக சைக்கிளிலே ‘பிரேக்’ கூட இல்லாமல் பவனி வந்து கொண்டிருப்பீர்கள். சோதனை மாதிரி உங்களைச்சோதித்து நிறுத்தி, தன்னுடைய ஸ்டாக்கிங்ஸிலிருந்து ஒரு ஐந்து காசு நோட்டுப்புத்தகத்தை எடுத்து, உங்களது சுய சரித்திரத்தையே எழுதிமுடித்து உங்களே ‘சார்ஜ்’ செய்துவிடும்; அப்பால், நீங்கள் காணிக்கை செலுத்தினால்தான் உங்கள் உருவம் இவ்வுலகைத் திரும்பிப் பார்க்கமுடியும் ‘தவறான பாதை’யில்—வேளை கெட்ட வேளையில்—இருவர் ஒருவராகிப் போக முடியுமா? புதிய படங்கள் திரையிடப்படும் கொட்டகைகளில் நாகுக்காக அசல் டிக்கட் ஒன்றுதான் வாங்கிக்கொள்ளக் கூடுமா? முதல் தேதிச் சம்பளம் பத்திரமாகப்போய்ச் சேர வேண்டிய இடத்தில் போய்ச்சேருவதுதான் சாத்தியமா? ‘நான் இருக்கப்பயம் ஏன்?’ என்று சொல்லி உலகோரைப் பயமுறுத்தும் அதிசயப்பிரகிருதியல்லவா இந்த நடமாடும் கடவுள்!

காக்கி உடுப்பில்தான் இத்தெய்வம் உணவு பெறுகிறது; ‘144’ என்ற சொல்லில்தான் உலகத்தைத் தரிசனம் செய்கிறது; ‘சட்டம்’ என்ற பண்பாட்டில்தான் உலக உருண்டையைச் சுற்றுகிறது. ஓடும் பஸ்ஸில், நழுவிப்பாயும் மின்சார வண்டியில்