பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107


போர்க்கு அந்தப் படைப்புக் கடவுளையே பரிசாகக் கொடுக்கப்படும்!' —விளம்பரம் இது!

முதல் பிரம்மா இருக்கும் இடம் நாளது தேதி வரை தெரியவில்லை. ஒரு சிலர் தேடுகிறார்கள்; தேடுகிறார்கள்; தேடிக் கொண்டேயிருக்கிறார்கள். இரண்டாவது பிரம்மாவின் இடம் தெரிகிறது. ஆனால், நடமாடும் இத்தெய்வத்தைப் பற்றிப் பலர் சட்டை செய்யாமல் ஒதுக்குகிறார்கள்; ஒதுக்குகிறார்கள்; ஒதுக்கிக்கொண்டேயிருக்கிறார்கள்!

சூழ்நிலைதான் மனிதனை உருவாக்குகிறதாம்—ஜாக்கிரதை!

நீங்களெல்லாம் சூயஸ் பிரச்சினை என்ன ஆயிற்று என்று தினசரித் தாளை வரி விடாமல் பார்ப்பீர்கள்; ஆனால் இந்த 'சாமி' சூயஸ் கால்வாயில் எந்தக் கோணத்தில் என்ன மாதிரிக் காதலை நுழைக்கலாம் என்று மண்டையைப் போட்டு உருட்டிக் கொண்டிருக்கும்; கனம் ராஜா அரசியல் ரகசியம் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். அதைப் பகைப் புலனாக வைத்துக் கொண்டு ஓர் அரசியல் சரடு திரிக்கலாமே என்று 'ஜபம்' செய்து கொண்டிருக்கும்; ஹைதராபாத்தில் ரயில் கவிழ்ந்ததல்லவா? அப்படியே காதலும் கவிழ்ந்துவிட்ட கதையைக் காது மூக்கு வைத்துப் பொது மக்களுக்குச் சொல்லலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்!— விசித்திரமான இந்தப் 'பேனா' மூலம் காதல் தூங்கும்; அன்பு அழும்; ரோஜா சிரிக்கும்; சமூகத்திற்கு 'ப்ரூக்லாக்ஸ்' கொடுக்கப்படும்; 'பச்சை