பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108


அறை' விஷயங்கள் பச்சை பச்சையாக மேடை ஏறி இந்திய நடனமாடும்!

இந்தப் பேனா மன்னர்கள்—'பேனா மன்னி'கள், நடமாடும் தெய்வங்கள் மட்டுமல்ல-காலம் கடந்தவர்கள்; காலத்தைக் காலடியில் போட்டு மிதித்துக்கொண்டு அதன் மீது நிற்பவர்கள். இவர்கள் மாஜி அமரர்கள்! நீங்கள் மதித்தால் மதியுங்கள்; 'மூளை' உள்ள 'பைத்தியக்காரர்கள்' மதிப்பார்கள். வெள்ளைக் காகிதத்தைக் கறுப்பாக்கி, கறுப்பான உங்கள் உள்ளங்களை வெள்ளையாக்கும் இந்த ஏழைத் தெய்வத்திற்கு இந்த வரவேற்புக்கூட வேண்டாமா, என்ன ?

—*—


4. பாக்கி அரையணா எங்கே?

தட்சணப் பிரதேசக் குழப்பத்திற்குச் சாங்கோ பாங்கமான விளக்கம் வேண்டுமா?-அப்படியென்றால் நீங்கள் ஜார்ஜ் கோட்டைக்குள் அடியெடுத்து வைக்க வேண்டியதில்லை; ஏன், தியாகராய நகருக்கு நடையைக் கட்ட வேண்டிய அவசியம் கூடக் கிடையாது. காரக்பூர் விபத்தைப் பற்றி நேரில் விஜயம் செய்து செய்திகள் திரிக்க ஆவலுண்டா? போகாத ஊருக்கு வழியைத் தேடிப் பிடிக்க வேண்டவே