பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


காட்சியைக் காண ஒரு முகம் போதவே போதாது; காதற் கடவுளுக்கு உள்நாட்டுத் தூதுத் தலைவராகப் பதவி ஏற்று, காதற் கட்டங்கள் சரிவர நடந்தேற உதவும் டைரக்டராக வேஷம் போட்டு, பிறகு 'லாலி' பாடும் வரை காதலுக்கு ஒரு சாட்சியாகவும் விளங்கும் 1956-ஆம் வருஷத்துத் தெய்வமல்லவா இது!

மனித யானைகளிடம் 'ஐயாவுக்கு ரெண்டு டிக்கெட் தானுங்களே?' என்று இதம் பதமாகக் கேட்டால், சரியான விடை கிடைக்கும் என்கிறீர்களா? ஓடும் பஸ்ஸில் உருளும் உலகத்தில் 'பெண்கள் ஜாக்கிரதை' பலகையின் திரை மறைவிலே 'அம்மா பூக்கடையா?' என்றால், அந்த நகைச்சுவைத் துணுக்கை அனுபவிக்கவா தெரிகிறது நம் பெண்களுக்கு......! கல்யாணத்திற்குப் பெண் பார்க்கப் போகும் 'டிப் டாப்' இளைஞரை 'ஸார், எங்கே போறீங்க?' என்ற அபசகுனக் கேள்வி கேட்டுத் திணறடிக்காமல் எப்படித் தப்ப முடியுமாம்? 'ஜோபடித் திருடர்கள் ஜாக்கிரதை!' என்ற அபாய அறிவிப்புப் பலகைகளின் பிரதிகளை இந்தத் தெய்வத்தின் நெஞ்சகத்திலேயும் நீங்கள் தாராளமாகத் தரிசிக்கலாமே! அடே, நீங்கள் எங்கே போக வேண்டும்? பாரீஸா? சைனாபஜாரா? ஸ்டாப்பிங்க் — ஹோல்டான் ப்ளீஸ்...!