பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. “MIĩ (III^sts !” அமிர்தம் சொட்டும் அந்த தேவகானம் காற்றிலே மிதந்து வரும்; அதைக் கேட்ட மாத்தி ரத்திலே நம் மனம் துள்ளி விளையாடும்? இடது தோளும் கண்ணும் துடிக்கும்; ஒற்றைக் கால் நெடுந்தவம் பலித்துவிட்ட மாதிரி ஒரு வகை மகிழ்ச்சி, ஹிந்தி ட்யூ'னும் இங்கிலீஷ் ட்யூ'னும் குசலம் பேசிக் கை குலுக்கிக் கொள்ளும்; தலை போகிற காரியங்களெல்லாம் தலைமறைந்து' போய் விடும்; சற்றே விலகியிரும் பிள்ளாய்!' என்ற பாட்டுக்கு வழி ஏற்படாமல், ஹோம் டிபார்ட்மெண்ட் கூட ஒதுங்கி வழி விட்டுவிடும்! -மீண்டும் மீண்டும் அந்த மதுர ஒலிதான் நம்மைச் சுற்றிச் சுற்றி வரும்; மீண்டும் மீண்டும் நாம்தான் அந்த மதுர ஒலியை சுற்றிச் சுற்றி வருவோம்கானம் அஞ்சல் செய்யப்பட்ட இடம் நோக்கிக் கரங்கள் கூப்பும்; கால்கள் ஒடும். கண்களைத் திறந்து பார்த்தால், அந்த தேவகானம் இழைத்த அதிசயப் பிறவி தேஜோ மயமாகத் தெய்வ லோகக் காட்சி தரும். நம்மை மறந்து நாம் மெய் சிலிர்த்து நிற்போம்; நம்மையறியாமல் நாம் கைநீட்டி நிற் போம்-டல்லெல்லாம் தெரியக் காட்டி! - அப்படி என்ன, அவர் இந்திர ஜாலக்காரரா? ...இல்லை, மகேந்திர ஜாலக்காரரா?