பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


அதோ பாருங்கள்-டெலஸ்கோப் இருந்தால் தலையைச் சுற்றித் துார வீசி விடுங்கள்-கலப்பட மில்லாத ஒண்ணும் நம்பர் ஊனக் கண்களால் மட்டும் பாருங்கள் - ஏன் தெரியுமா? கோவில் கொண்டு விளங்கச் சகல யோக்கியதாம்சங்களும் ஒருங்கே நிரம்பப்பெற்ற அந்தத் தெய்வத்தின் சட்டையிலுள்ள ஆயிரம் கண்கள் உங்களுடைய ஞானக் கண்களிலே பட்டுத் தொலைத்து, திருஷ்டி கிருஷ்டி ஏற்பட்டு விட்டால் அதற்கு யார் ஜவாப் த்ாரி? அந்த அரசாங்க ஆசைக்குள்ளே - ஜமீன் மோஸ்தரில் அணியப் பட்டிருக்கும் அந்த முண் டாசுக்குள்ளே-தோள்மீது இமயமலைப் போலச் சுமந்து கிடக்கும் தபால் பைக்குள்ளே-எலும்புந் தோலுங் கொண்ட அந்தப் பஞ்சை உருவத்தி னுள்ளே ஒரு தபால்காரரையாவைத் தரிசிக் கின்ருேம்? கண்ணுக்கெட்டாத தொலைவிலுள்ள நம் அருமைத் தந்தையை-அம்புலியின் எழில் காட்டி, அன்னம் பிசைந்தூட்டி ஆளாக்கிய அன்னையைஒரே ரத்த பாசக்குரல் எழுப்பும் உடன்பிறப்பைகாதலியை-இல்லற ஜோதியை-உயிர் காக்கும் தோழனே-ப்ராக்ரஸ் ரிப்போர்ட் அனுப்பும் காலேஜ் பிரின்ஸ்பாலே-பத்திரிகை ஆசியரைஇன்னும் எத்தனை எத்தனையோ பேரைய்ல்லவா தரிசிக்கின்ருேம்? - நடமாடும் தபாலாபீஸ் வேண்டுமானல் தபால் இலாகாவில் நடைமுறைச் செயல்களின் த. த. க.-8