பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 22 காயமே இது பொய்யடா! காற்றடைத்த பையடா! மாயனர் குயவன் செய்த மண்பாண்டம் ஒடடா!...” அடடே. ஒடிவிடாதீர்கள். நில்லுங்கள் ஐயா, நில்லுங்கள். ட்யூன் போட்டுப் பாடிப் பாருங்கள், அப்புறம், இந்தப் பாடல் எவ்வளவு இனிமையாக இருக்கிறதென்பதை நீங்களே உணர்வீர்கள். அப் போது, அதாவது நீங்கள் உங்களுக்குள்ளாகவே உய்த்துணருகின்ற காலே, இந்தப் பாடலின் அப்பட் டமான மேதைத் தனத்தை அல்லது கசக்கக்கூடிய உண்மையை-அல்லது, எச்சரிக்கை பொதிந்த பச் சையான தத்துவத்தை நீங்கள் உங்களையும் அறியா மல் உணர்ந்து கொள்ளவும் முடியும்! 'சூ, மந்திரக்காளி!' என்று நம்மை எச்சரிப் பதோடு நில்லாமல், அந்த மந்திரக்காளியையும் எச்சரித்து, அந்த எச்சரிக்கையின் அபாய அறிவிப் புச் சின்னமாகத் தன்னுடைய செப்பிடுவித்தை விளை யாட்டின் கேந்திர நிலையத்திலே ஒரு மண்டை ஒட்டை காட்சிப் பொருளாக வைத்துக் கொண்டி ருக்கும் குறளி வித்தைக்காரர்களை நான் எங்கள் பூவைமாநகரில் மட்டுமல்ல, நாகரிகம் விடிைக்கு விடிை வளர்ச்சி பெறுகிற சென்னை மாநகரத்திலும் கூட அடிக்கொரு முறை கண்டிருக்கின்றேன். இத் தகைய மண்டை ஓடு நம்முடைய வாழ்க்கையின் நிலையற்ற தன்மைக்கு ஒர் எடுத்துக் காட்டாகவே அமைந்துள்ளது; அல்ல, அமைக்கப்பட்டுள்ளது: