பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126


அவ்விடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிருர் கள். 'பால் ஆராய்ச்சி'க்கு நேரம் ஒதுக்காமல், ஒதுங்கியுள்ள இடத்தில் சிவனே' என்று விழுந்து விடாமல் கைப்பிடிவாாைப் பற்றிக்கொண்டு நின்று: தொலைக்கிருேம். பயணச் சீட்டைக் கேட்டு வாங் கவும்! என்று மற்ருெரு எச்சரிக்கை பயணச் சீட்டை-ஆமாம், டிக்கெட் கேட்டு வாங்காதவர் கள் அகப்பட்டுக் கொள்கிருர்கள். திரும்புகிருேம். 'மூன்று வயதுக்கு மேற்பட்டு பன்னிரண்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முழுடிக்கட் வசூலிக்கப்படும்’ என்று அடுத்த அபாய அறிவிப்பு செப்பும். அந்த வயது வரம்பு நம்மை ஒன்றும் செய்யமுடியாது என் கிற இறுமாப்பில், நாம் அகப்பட்டுக்கொள்ள ஆண்டவன் வைக்கவில்லை என்கிற தைரியத்தில், நாம் நிம்மதியாகப் பெருமூச்செறிகிருேம். அந்தப் பெருமூச்சில், ஓ மை காட்!...எனக்கு ஏன் இப்படி வயதை வளர்த்துவிட்டாய்?’ என்ற முறையீடும் அங்கலாய்ப்பும் ரகசியமாகத் தொனிக்கும் சிதம்பர ரகசியத்தையும் நாம் மறந்து விடுவதில்லை. இறங்கு வதற்காக வெளியே முண்டியடித்துக்கொண்டு விலகுகிருேம். அங்கே பார்த்தால், ஓடும் வண்டி யில் ஏறவோ இறங்கவோ முயற்சித்தல் கூடாது!’ என்று மற்ருெரு அபாயம் அறிவிப்பாகப் பரிணமிக் கும். முயற்சித்தல்' என்று எழுதியிருப்பது பிழை. முயற்சி செய்தல்' என்றுதான் இருக்கவேண்டும என்ற உண்மையை வெளியிட்டு தமிழக அரசின் கோபத்துக்கு ஆளாகக் கூடாதே என்று. வண்டி நின்றபின் இறங்க முயல்கிருேம் இறங்குகையில்,