பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12

போட்டேன். “ள்” எனும் எழுத்துக்கு அழுத்தம் மிகுதியல்லவா? அதற்குக் கிடைத்த நினைவுச் சின்னமே மேற்படி தழும்பு. இப்போதும்கூட, கப்பல் என்று எழுதினால், "ள்"தான் விழுகிறது. ஆனலும் “ள்”ளை “ல்” ஆகத் திருத்தி விளம்பிவிடுவதுதான் எனக்குப் பழக்கம். இதைக் கண்டு, இன்னும்கூட என் அகிலாண்டம் என்னைக் கேலி செய்கிறாள்!

“அப்பா, அப்பா, புகைக்கும் ஆனை என்ன, சொல்லேன்!” என்றான் என் பையன்.

எனக்குப் புரியவில்லை.

“அது கப்பலாக்கும்!”

எனக்குப் புரிகிறது, இப்போது . என் பிள்ளைக்காக நான் பாடிய பாட்டு இது. ' “ட்யூன்” போட்டுப் படியுங்கள்.

“கப்பல் நல்ல கப்பல்; கண்மயக்கும் கப்பல்;
கப்பல் கண் விழித்தால், கரையைக் காட்டும் கப்பல்!”

உணவுப் பற்ருக்குறை இன்னமும் நம் தாய்த் திருநாட்டை ஆட்டிப் படைத்துச் சோதித்து வரும் இந்நேரத்தில் கப்பல் கப்பலாக உணவுத் தான்யங்கள் அயல்நாடுகளிலிருந்து நம் நாட்டுக்கு வந்து இறங்கிக் கொண்டிருக்கின்றன. உணவுக் கப்பல்களைச் செய்திச் சுருள்களிலே நாம் காணும்பொழுது மெய்யாகவே அக் கப்பல்களைக் கையெடுத்துக் கும்பிட நமக்குத் தோன்றுவது இயல்பேயன்றோ !