பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲ $ ! வேண்டும் என்று வருமுன் காக்கும் பண்போடு நாம் அதன்படி நடப்பதே சாலச் சிறந்தது. இதை நாம் கேரோ செய்தால், வந்தது வினே! அதற் காகத்தானே வருமுன் காக்கும் அவசியத்துக்கு ஒரு குறளைச் செலவு செய்திருக்கிருர் தெய்வப்புலவர். பெட்ரோல் பங்கு. இங்கே புகை பிடிக்கக் கூடாது!’ என்பதுதான் தலைமை எச்சரிக்கை. இங்கே ‘இன்று சொக்கம், நாளை கடன்!” என்ற குறிப்பு மட்டும் இருக்காது! இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு தமிழக அரசு, எனக்கும் அழைப்பு அனுப்பி வைத் தது. அழைப்பில் இருந்த ஒரு சீட்டில், இந்தச் சீட்டைக் காட்டி, சீட்டை-இடத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்!” என்ற ஒரு குறிப்பும் அச் சிடப் பெற்றிருந்தது. இடம் கிடைப்பது அரிது என்னும் அபாய அறிவிப்பு அக்குறிப்பில் தொக்கி யிருந்த உண்மை நயம், இடத்துக்காகப் போராடிய பிறகுதான் அடியேனுக்குப் புரிந்தது. 'அளவோடு பெற்று. வளமோடு வாழுங்கள்: -"இரண்டு மூன்று குழந்தைகளே போதும்!” என்று பட்டணத்து வீதிகளிலே விளம்பரங்கள் சிரிக்கும். அடியில் கவனித்தால், குடும்பக் கட்டுப் பாடு செய்திடுவீர்!’ என்றும் இருக்கும். இதே போலத்தான் எல். ஐ. வி. விளம்பரங்களும்! இவை யெல்லாம் நம் வாழ்க்கைக்கே உரித்தான அனுபவ எச்சரிக்கைகளாகும்! .